பக்கம்:அறிவியற் சோலை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அறிவியற் சோலை -- உடையது. இங்கிருந்துகொண்டே அழகொழுகும் ‘ப்யூட்சி மலையினைக் காணலாம். இங்குள்ள ப்யூட்சி' சிற்றுண்டிச்சாலை மிகவும் சிறப்புடையது ; கண் டோரை மாய உலகு என்றெண்ணி மயங்கவைப்பது. இதன் உட்புறத்தில் வெந்நீரூற்றுக்களும், நீந்தற் குளங்களும் உள்ளன. குறைந்த செலவில் நிறைவு அளிக்கும் உணவை இங்கு பெறலாம். இச் சிற்றுண்டிச் சாலை மிகவும் துய்மையுடன் விளங்கு கின்றது ; அழகான இருக்கைகளை உடையது. இங்குள்ள உணவுப் பட்டியல் தனிச் சிறப் புடையது ; அதில் உங்கள் வரவு நல் வரவாகுக ! என்பது பொறிக்கப்பட்டிருக்கும். ஆ | ஆ | இங்கு எவ்வளவு அருமை ! பல்பொருட் பண்டாரங்கள் பெரும் பெரும் பல்பொருட் பண்டாரங்கள் (Stores) பல இந்நாட்டில் உள்ளன. ஒவ்வொரு பண்டாரமும், ஆயிரக் கணக்கான சதுர கெசங்கள் (yards) பரப்பளவுடைய ஆறு அல்லது ஏழு அடுக்கு களையுடைய கவின் பெறு கட்டிடத்தில் உள்ளது. சிறிய குண்டுசி முதல் பியானே என்னும் இசைக் கருவி வரை எல்லாப் பொருட்களையும் மலிவான விலைக்கு இங்கு வாங்கலாம். இவ்விதப் பல்பொருட் பண்டாரங்கள் டோக்கியோ போன்ற பெரிய நகரங் களில் பலப்பல உள்ளன. மேலும் பண்டகசாலை அமைந்த கட்டிடத்தில் உணவுச் சாலைகளும் ஒய்வுக் கூடங்களும் உள்ளன. மின்சாரத் துரக்கி (lift) விரின் மூலம், ஒரு மாடியிலிருந்து மற்ருெரு மாடிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/96&oldid=739337" இலிருந்து மீள்விக்கப்பட்டது