பக்கம்:அறிவியற் சோலை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய சப்பான் 93


எளிதில் சென்று விடலாம். இவ்விதப் பல்பொருட் பண்டாரங்கள் நம் நாட்டில் இல்லை என்றே கூறலாம். பண்புள்ள மக்கள் சப்பானிய மக்கள் மிகவும் பெருந்தன்மையும், பெருமிதமும், கடமை உணர்ச்சியும் உடையவர் கள்; இயற்கை அழகு பெற்று இன்பப் பூங்காவாய் விளங்கும் அவர் தம் நாட்டைப் போல் கலை யுணர்வும் கொண்டவர்கள். இந்நாட்டின் கண்ணெனத் திகழும் பெண்மணிகள் பூத்தொடுத்தலிலும், பூக்களில்ை இல்லங்களை அழகு செய்வதிலும், தேநீர் விருந்தினை ஏற்பாடு செய்வதிலும் சிறந்த பயிற்சி உடையவர் களாய் விளங்குகின்றனர். இந்நாட்டு மக்களில் பெரும்பாலோர், பசிங்கோ (Pachinho) என்னும் சலவைக் கல்லினலாகிய பொறியில் விளையாடும் சூதாட்டத்தில் பெருவிருப்பு உள்ளவர்களாய் விளங்கு கின்றனர். டோக்கியோ நகரில் பல இடங்களிலும் இவ் விளையாட்டு நடைபெறுகின்றது. இவ் விளை யாட்டினுல் சில மக்கள் பெருவாரியான பொருளை இழக்கின்றனர். இது எவ்வாருே அவர்களது பொழுது போக்கிற்கு இன்றியமையாத தொன் ருய் அமைந்து விட்டது. இந்நாட்டிலுள்ள விடுதி களிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும் வேலை செய் வோர், மோட்டார் ஒட்டிகள் முதலியோர் மேலை நாட் டாரைப் போன்று எந்த விதமான கையூட்டையும் (tips) பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப் பிடத் தக்கதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/97&oldid=739338" இலிருந்து மீள்விக்கப்பட்டது