பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
176

குத் தளத்தின மேல் ஏற்றப்பட்டுள்ள சுழல் தகடும் ஆகும். இதன் மூலம் கடைசல் எந்திரததின் ஊட்டத்தினைச் சார்ந்திராமல் கையினால் ஊட்டுவதற்கு முடிகிறது. இது தேவையான கோணத்திற்குத் திரும்புவதற்கு இது உதவும்

compound sliding table : (எந்.) கூட்டுச் சறுக்குத் தளப் பலகை : வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை மரையானியால் பிணைத்து வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ள எந்திர சாதனத்தின் பலகை. இதில் நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் நகர்வதற்கான இரு அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்

compound wound : (எந்.) மின்வாய் முனைகள் ஒவ்வொன்றிலும் உள்ள இணைப்புலச் சுருணையின் ஒரு பகுதியின் உச்சியில் ஒரு தொடர்புலச் சுருணையின் ஒரு பகுதி சுற்றி வைக்கப்பட்டுள்ள ஒரு மின்னாக்கி அல்லது மின்னோடி

compound wound continuous current dynamo : (மின்.) கூடுச் சுருணை தொடர் மின்னோட்ட நேர் மின்னாக்கி : இது நேர் மின்னோட்டத்தை உண்டாக்கும் ஒரு மின்னாக்கி.இதில் அதன் இணைப் புலத்திற்கும் தொடர் புலத்திற்கும் இடையில் ஒரு திரள் இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் புலத்தின் வலிமை அதிகரிக்கிறது, மின்னோட்ட அளவும் அதிகரிக்கிறது; சேர் முனையில் மின்னழுத்தம் இயல்பாகக் குறையும் போக்குத் தடுக்கப்படுகிறது

compressed air : அழுத்தியகாற்று : காற்றழுத்தத்தால் இயங்கும் கருவிகளுக்கு விசையளிக்கும் ஆதாரமாக இருக்கும் அளவுக்கு அழுத்த மூட்டிய காற்று

compressibility : (இயற்.) அழுத்ததிறன் : இது பருப்பொருள்களின் ஒரு பண்பு. அழுத்தத்தினால் பரும அளவு குறையும் தன்மை

compressing : அழுத்திச் செறிவாக்கம் : ஒரு புத்தகத்திற்கு உறையிட்டவுடன் அதனை ஒரு பெரிய அழுத்து கருவியில் வைத்து இறுக்கமாக அழுத்தி அது காயும் வரை வைத்திருப்பார்கள். இதனை 'அழுத்திச் செறிவாக்கம்' என்பர்

compression : அழுத்தம் : அழுத்தம் கொடுத்து அடர்த்திச் செறிவாத்குதல். இது இழுப்பு விசைக்கு நேர்மாறானது

compression braking : (தானி; எந்.) அழுத்தத்தடை : உந்துவண்டி ஒரு குன்றிலிருந்து இறங்கும் போது தடைவிசை ஏற்படுத்துவதற்காக எஞ்சினின் அழுத்தத்தைப் பொறுத்து எஞ்சினுக்குச் செல்லும் வாயுவின் அளவைக் குறைத்துத் தடையுண்டாகுமாறு செய்தல்

compression coupling : (எந்.) நுனிநோக்கிச் சிறுத்துச் செல்லும் பிணைப்பு உறுப்பு. இணைத் தண்டுக்கு இணையாகப் பல மரையாணிகள் வரிசையாக அடிக்கப்படும்போது இது இணைத் தண்டினை இறுக்ப் பற்றிக் கொள்கிறது

compression gauge : (தானி; எந்.) அழுத்த அளவி : கனற்சி அறையிலுள்ள வாயுக்களின் மீதான அழுத்தத்தினை ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனைபவுண்டு என்ற் அளவில் பதிவுசெய்யக் கூடிய ஓர் அளவுமானி

compression ignition engine : (வானூ.) ஆழத்த சுடர் மூட்டு எந்திரம் : இந்த வகை எந்திரத்தில் எரிபொருள் நீள் உருளையில்