பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
217

designer or layout man : வடிவமைப்பாளர் : தமது நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் வகை பற்றிய வடிவமைப்புகளைத் தயாரிக்கத் தகுதி வாய்ந்த வடிவமைப்பாளர்.

designing engineer : வடிவமைப்புப் பொறியாளர் : ஒரு குறிப்பிட்ட பணிக்குரிய பொறியியல் மற்றும் உருவமைப்பு நுட்பங்களைத் கவனிக்கும் வல்லுநர். தம்மிடம் அளிக்கப்படும் வடிவமைப்புகளைச் சிக்கனமாகவும், திறம்படவும் தயாரிக்க வழிவகுத்துக் கொடுக்கும் பொறுப்பும் இவருடையது.

destructive distillation : (வேதி.) சிதைத்து வாலைவடித்தல் : ஒரு பொருளைக் காற்றுடன் கலக்காமல் சூடாக்கிச் சிதையுமாறு செய்து, புதிய பயனுள்ள பொருள்களை ஆக்குதல். இது சாதாரண வாலை வடித்தலிலிருந்து வேறுபட்டது. இதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சாதாரண வாலை வடித்தலில் இயற்பியல் மாற்றங்கள் மட்டுமே நிகழும்.

detach : தொடர்பறு : பட்டறை நடவடிக்கைகளில் மற்ற செயற்பாடுகளுக்கு மாற்றுவதற்காகத் தொடர்பறுத்தல் அல்லது இணைப்பகற்றுதல்.

detail : தனிக்கூறு : அமைப்பான் பகுதிகளின் ஒரு தனிக்கூறு. ஏதொன்றிலும் அமைந்துள்ள சிறிய ஆனால் இன்றியமையாத ஒர் அமைப்புக்கூறு.

detail drawing : வகை நுணுக்க வரைபடம் : ஒர் எந்திரத்தின் அல்லது வேறு பொருட்களின் வகை நுட்பங்கள், பரிமாணங்கள், பயன்படும் பொருட்கள், உறுப்புகளின் எண்ணிக்கை, செயற்பாடுகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைபடம்.

detailer : வரைவாளர் : வகை நுட்ப வரைபடம் வரைபவர்.

detector : (மின்.) ஒலியலை மாற்றி : கேட்க முடியாத ஒலியலை அதிர்வுச் சைகைகளைக் கேட்கக் கூடிய ஒலியலை அதிர்வுச் சைகைகளாக மாற்றுவதற்கான ஒரு சாதனம்.

detergent : சலவைப் பொருள் : அழுக்கு,எண்ணெய்ப் பசை முதலியவற்றைத் கரைத்துத் துப்புரவு செய்யும் திறமுடைய பொருள்.

detergent oils : (தானி.) சலவை எண்ணெய்கள் : துப்புரவுத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் சலவைப் பொருள்களுடன் சேர்க்கப்படும் எண்ணெய்கள்.

deterioration : அழிகேடு : அழி கேடாக்குகிற அல்லது படிப்படியாக தரக்குறைவு உண்டாக்குகிற நிலை.

determine : அறுதியிடல் : துல்லியமான அளவீடுகள் மூலம் கணித முறையில் மதிப்புக்களைக் கணக்டுதல்.

detonate : (தானி.) வெடிக்கச் செய் : வெப்ப மூட்டி அல்லது தீ மூட்டி அழுத்தத்திலுள்ள வாயுக்களை விரைவாக விரிவடையச் செய்தல்.

detonation : (தானி.) வெடிப்பு : உள் வெப்பாலை எந்திரங்களில் சுத்தி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிப்பு உண்டாதல்.

detonator : வெடிப்புப் பொருள் : வெடிகுண்டுகளில் பெருத்த விசையுடன் வெடிப்பைத் தூண்டிவிடும் வெடிப்புப் பொருள்.

deuterium : (வேதி.) டியூட்டெரியம் : இரண்டு புரோட்டான்களும். எலெக்ட்ரான்களும் அடங்கியுள்ள கனமான ஹைட்ரஜன் அணுக்கள்.