பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

போன்ற காற்றினும் எடை குறைந்த வானூர்தியைக் குறிக்கும் ஒரு சொல்

aerostatics: (வானு.) வளிச்சூழல் சமநிலையியல்: வளிமப் பாய்மங்கள், அவற்றில் அமிழ்ந்திருக்கும் பொருள்கள் ஆகியவற்றின் சமநிலை பற்றிய அறிவியல்

aerostation: (வானு.) வான்கூண்டு செலுத்துதல்: வான்கூண்டுகளைச் செலுத்துங்கலை

african mahogany: (மா.வே.) ஆஃப்ரிக்கச் சீமை நூக்கு: சீமை நூக்குக் குடும்பத்தைச் சேர்ந்த ஒர் அரிய மரவகை. முக்கியமாக ஆஃப்ரிக்காவில் காணப்படுவது. மிகுந்த உயரமும் அகலமும் உடைய இந்த மரம் நல்ல மெருகேற்றும் கட்டுமான மரவகை. நுட்பமான அறைகலன்கள் செய்யப் பயன்படுகிறது

after birth: (உட.) பேறுகால இளங்கொடி: பிறக்காத குழ்ந்தை தாயிடமிருந்து உணவும், ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடமிருந்து வெளியே வந்துவிடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்படலமும் வெளிவரும். இவை இரண்டும் சேர்ந்து பேறுகால இளங்கொடி எனப்படும்

after-damp: (வேதி. ) சுரங்க நச்சு வளி: ஒரு சுரங்கத்தில் சுரங்க வெடி விபத்துக்குப் பின்னால் உண்டாகும் கார்பன்டையாக்சைடு என்னும் நச்சு வளி

after-image: (வண்.) பின்தோற்றம்: ஒரு பொருளைப் பார்த்த பிறகு மனதில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம்

agar-agar: கடற்கோரைக் கூழ்: கடற்கோரை வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைக் கூழ். ஆய்வுக்கூடத்தில் இவற்றில் பாக்டீரியாவை வளர்க்கின்றனர்

agaric: (தாவ.) நிலக்குடை: நச்சுத் தன்மையுள்ள காளான் போன்ற நாய்க்குடைவகை.

நிலக்குடை

agate:(களி.) படிகக் கல்: (1) ஒரு வகைப் பலவண்ணப் படிகக் கல். இதில் வண்ணங்கள் பொதுவாகப் பட்டைக் கோடுகளாக இருக்கும் (2) நவமணிகளில் ஒன்று. (3) (அச்சுக்கலை) சுமார் 51/2 அலகுகள் வடிவளவுள்ள ஒர் அச்செழுத்துரு

agfacolour: ( வண்.) அக்ஃபா வண்ணம்: இது ஒருவகை வண்ண ஒளிப்படக் கலை வகை. இதில் மூன்று ஒளியுணர் சுருள்கள், ஒரே செல்லுலாய்டு ஆதாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சுருள்கள், நீல ஒளியுணர்வு, பச்சை ஒளியுணர்வு, சிவப்பு ஒளியுணர்வு கொண்டவை. ஒளிப்பட உருவிளக்கப் பொருளுடன் இணைந்து சுருளில் பொருத்தமான வண்ண உருக்காட்சியை உண்டாக்கக் கூடிய பொருள்கள் இச்சுருள்களில் அடங்கியுள்ளன

agglutination: (உட.) குரிதியணு ஒட்டுத்திரள்: குருதியிலுள்ள அணு உயிர் ஒட்டுத்திரள். இது குருதியில் இருக்கும்போது அதிலுள்ள நச்சுப் பொருள்களை உட்கொள்கிறது. ஆரோக்கியமான மனிதரிடமிருந்து நோயுற்ற மனிதருக்குக் குருதியைப் பாதுகாப்பாகச் செலுத்த முடியுமா என்பதைச் சோதித்துப் பார்க்க இது உதவுகிறது

aggregate: ஓரினத் தொகை: கலவைப் பொருள்: ஒரே இயல்புள்ள அணுத் துகள்களின் திரட்சி