பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

gambrel roof : (க.க) விரிகோணச் சாய்வுமுகடு: விரிகோணத்தில் சாய்வுடைய ஒரு கூரை

gamma : (மின்.) காமா : ஒரு பொதுச் சேமிப்பான் இணைக்கப்பட்ட டிரான்சிஸ்டரில் கிடைக்கும் மின்னோட்டத்தின் அளவைக் குறிக்கும் குறியீடு. இது, சேமிப்பான் அழுத்தம் நிலையாக இருக்கும் போது ஆதாரமின்னோட்டத்தில் ஏற்படும் ஒரு வீத அளவுக்குச் சமமாகும்

gamma rays : (இயற்) காமாக் கதிர்கள்; காமாக் கதிரியக்கம்: மிகக் குறுகிய ஒளிக்கதிரலையுள்ள ஊடுருவு கதிர்கள்

gang drilling machine : கூட்டுத் துரப்பண எந்திரம் : பல கதிர்களைக் கொண்ட துரப்பண எந்திரம். இதனால் ஒரே சமயத்தில் பல துளைகளைத் துரப்பணம் செய்யலாம். பெருமளவு உற்பத்திப் பணிகளுக்கு இது முக்கியமாகப் பயன்படுகிறது

gang drill : (உலோ) கூட்டுத் துரப்பணம் : ஒரு பொதுவான ஆதாரத்துடன் செயற்படும் பல துரப்பணங்களின் தொகுதி

gang mills : கூட்டு எந்திரங்கள்: வேலைத் திறனை அதிகரிப்பதற்காகக் கடைசல் எந்திரத்தின் ஒரே நடுவச்சில் அமைக்கப்பட்டுள்ள வரிசையான வெட்டுக் கருவிகள். ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரப்புகளில் வேலைப்பாடு செய்யப் பயன்படுகிறது

gangway : ஊடுவழி : கப்பல் ஏற்ற இறக்க இடைவெளி

gantry : (விண்.) நிலைத்தாங்கி: ஏவுகணைகளைச் செலுத்துவதற்கான இடங்களில் பேரளவு ஏவுகணைகளை நிறுவவும். ஒருங்கிணைக்கவும், பழுதுபார்க்கவும் பயன்படும், பல்வேறு மட்டங்களில் மேடைகளைக் கொண்ட, நகரக் கூடிய பாரந்தூக்கி போன்ற அமைபபு

gap : (வானூ.) (1) இடைவெளி : இருதள விமானத்தில் இறகுகளுக்கு இடையிலான தொலைவு

(2) பொறிவினைச் செருகி

(3) திறந்திருக்கும்போது இரு தொடர்பு முனைகளுக்கிடையிலான தூரம்

(4) ஒரு மின் சுற்றுவழியில் உள்ள ஒரு வளி இடைவெளி

gap bed : (எந்.) சந்துப்படுகை : கடைசல் எந்திரத்தில் அமைந்துள்ள அளவைவிட அதிக அளவு விட்டமுடைய பொருளைப் பொருத்துவதற் காக,தலைமுனைத் தாங்கிக்குக் கீழே முன்புறம் பின்னொதுக்குப் பகுதியைக் கொண்ட ஒரு கடைசல் எந்திரப் படுகை. இந்தப் படுகை. சந்துக்குக் கீழே வலுப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சந்து பயன்படுத்தப்படாத போது இடைவெளிப் பாலத்தினால் மூடப்பட்டிருக்கும்

gap shears: (உலோ.வே) இடைவெளித் துணிப்பான்கள் : சதுர வெட்டுத்துணிப்பான் போன்ற ஒரு கத்திரிப்புக் கருவி, அடைப்புத் துளைகளுக்குள் உள்ள இடை வெளியில், நீளவாக்கிலோ குறுக்கு வாக்கிலோ உலோகத் தகடு செருகப்பட்டிருக்கும். இடைவெளி குறைவாக இருக்குமிடத்து நீளத் துணிப்புகள் செருகப்பட்டிருக்கும்

garbage : (விண்) சிதைவுப் பொருள்கள்: வட்டப்பாதையில், சுற்றுப்பாதையில் சுற்றி வரும் பிற செயற்கைக் கோள்களின் சிதைவுகள் உட்பட பல்வேறு பொருள்கள்

garden bond ; (க.க) தோட்டப் பிணைப்பு: இது ஒவ்வொரு வரிசை