பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

சுருளாகச் சுழலும், எந்திர சாதனம். குறுக்கு வழியில் வழக்கமாகச் செல்லும் விமானத்தின் செலுத்திகள் சோர்வடையாமல் இது தடுக்கிறது

gyro-plane : (வானூ.) நிமிா் விமானம் : தலைக்கு மேலே விரைவாகச் சுழலும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் செங்குத்தாக மேலெழுந்து செல்லும் விமானம்

gyro scope : (இயற்.) திருகு சுழலாழி : சுழல் வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு எந்தத் திசையிலும் திருப்பு வளையங்களின் உட்புறம் அமைந்த சமனுருள். இது கப்பல்களை நிலைப்படுத்துவதற்கும், விமானங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது

gyro-scopic turn indicator : (வானூ.) திருகு சுழல்மானி: திருகு சுழல் இயக்கத்தைப் பொறுத்து இயங்கித் திசைகாட்டும் அளவு கருவி