பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

ஒரே திசையில் இருக்கக் கூடிய ரயில்வேக் கார்களில் பயன்படுத்தப்படுவது போன்ற தாங்கிகள். இது இருசுக் கட்டைகளைத் தாங்கிக்கு எதிராகத் தாங்கிப்பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் போதுமான கனமுடையதாக இருக்கும்

half binding : அரைக்கட்டுமானம் : புத்தக மூலையும், முதுகுப் புறமும் தோலால் அமைந்த கட்டுமானம்

half - diamond indention : (அச்சு.) அரை வைர வடிவ ஓரம் : அச்சிடும்போது பக்கங்களில் அரை வைர வடிவத்தில் ஓரப்பகுதியில் இடம்விட்டு அமைத்தல்

holf-lap joint : (மர.வே.) சமநிலைப்பிணைப்பு : இணைக்கப்பட வேண்டிய இரு துண்டுகளின் கனத்தைப் பாதியளவுக்குக் குறைத்துப் பொருத்துதல்

half-life : (மின்ன.) பாதிக்கால அளவு: அணு ஆற்றல் சக்திப் பொருள் இயல்பாக வானிலிருந்து விழும் அளவில் அரைப்பகுதி விழும் கால அளவு

half moon stake : (உலோ.) அரைவட்ட முளை: மேற்புறம் சந்திரனின் பாதிப்பிறை போன்று வளைந்து ஒரு புறம் சாய்ந்துள்ள ஒரு முளை. வட்டவடிவு விளிம்பு இயக்கங்களில் இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது

half nut : (பட்.) அரைச் சுரையாணி : நீளவாக்கில் பிளக்கப்பட்டுள்ள ஒரு சுரையாணி. சிலசமயம் ஒருபாதி ஒரு திருகின் மீது இயங்கும். சிலசமயம் ஒரு கடைசல் ஊர்தியிலுள்ள அரைச்சுரையாணி போன்று ஒரு திருகாணியைச் சுற்றி இயங்கும்

half-pack bench saw: (மர.வே.) இரட்டை கைவாள் : வெட்டப்பட வேண்டிய பொருள் முழுவதையும் வெட்டுவதற்கு வேண்டிய விறைப்பான வெட்டு முனைகளையும், திறனையும் கொண்ட இரம்பம், இது பெரும்பாலும் 35-50 செ.மீ. நீளத்தில் செய்யப்படுகிறது. விறைப்பான தண்டுப்பகுதி அலகின் நீளத்தில் ஒரு பகுதி வரையில் மட்டுமே நீண்டிருக்கும். இதன் மூலம் கைவாள், நைவாள் ஆகிய இரண்டின் செயல் முறையும் இதில் இணைந்திருக்கும்

half pattern : அரைத்தோரணி : ஒரு தோரணியின் ஒரு பாதி. இது வார்ப்படத்தின் வசதிக்காக மையத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும்

half-round file: அரைவட்ட அரம் : ஒரு புறம் தட்டையாகவும், மறு புறம் வளைவாகவும் உள்ள ஓர் அரம். இதிலுள்ள புறங்குவியின் அளவு ஒருபோது அரைவட்டத்திற்குச் சமமாக இருக்காது

half section : அரைக் குறுக்கு வெட்டுப் பகுதி : எந்திரவியல் வரைபடத்தில், மையக்கோட்டில் முடிவுறும் குறுக்குவெட்டுத் தோற்றம். இதனால், ஒரு பகுதி, புறத் தோற்றத்தையும், மறுபகுதி உட்புறத் தோற்றத்தையும் காணலாம்

half-step-increments: (கணிப்.) அரைப்படிமுறை ஏறுமுகப்படிகள்

half story: (க.க.) அரைக்கூரை: - கூரைக்கு நேர் கீழே வேயப்பட்டுள்ள கூரைக்கட்டமைவின் ஒரு பகுதி. இது முடிவுற்ற முகட்டினையும், தளத்தினையும், பக்கச் சுவரையும் கொண்டிருக்கும்

half title : (அச்சு.) குறுந் தலைப்பு : புத்தகத் தலைப்பும் புத்தகத்திற்கு அல்லது புத்தகப் பிரிவுக்கு முன்னுள்ள சிறு தலைப்பு

half tone : (அச்சு.) நுண்பதிவுப் படம் : ஒளிப்படத்தில் ஒளி நிழல்