பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

பின்பு பதப்படுத்தப்படாத பித்தளை. விற்கருள்கள் முதலியவற்றிற்குப் பயன்படுகிறது

hard drawn copper wire : (மின்.) கடினச் செம்புக் கம்பி : பல்வேறு வடிவளவுகளுள்ள பொறிப்புக் கட்டைகளின் வழியே உட் செலுத்தி நீட்டும்போது கடினத் தன்மை பெறுகிறது. இந்தக் கடினமான கம்பி, தொலைபேசிக் கம்பியாகவும், தந்திக் கம்பிகளாகவும் பயன்படுத்தப்படுகிறது

hardeing : கெட்டியாக்குதல் : எஃகினைக் கெட்டியாக்குதல். எஃகினை உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி, பின்னர் அதனை எண்ணெய், நீர் அல்லது வேறு பொருத்தமான கரைசல்களில் திடீரென அமிழ்த்திக் குளிர்விப்பதன் மூலம் கெட்டியாக்கப்படுகிறது. தனிவகை எஃகுகளைக் கெட்டியாக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன

harden : (உலோ.) கடினமாக்கல்: முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம் விரைவாகக் குளிர்விக்கிறார்கள்

hard iron : கெட்டியிரும்பு : அடர்த்தியாகவும், சொரசொரப்பாகவும் உள்ள வார்ப்பிரும்பு. இது தேனிரும்பைவிட மங்கலான நிறமுடையது

hardness : (இயற்.) கடினத்தன்மை: ஒரு பொருள், மற்றொரு பொருளினால் சுரண்டப்படுவதை எதிர்க்கும் தன்மை.இந்தக் கடினத் தன்மை, மோஹ்ஸ் அளவுப்படி ஏறுவரிசைத் தனிமங்களாகக் குறிக்கப்படும்

1.வெளிமக் கன்மகி,

2.கணிக்கல்.

3.சுண்ணகம்,

4.ஃபுரோரைட்.

5.அப்பைட்டைட்

6.களிமம்.

7.படிகக்கல்.

8.புட்பராகம்

9.நீலமணி.

10.வைரம்.

hardpan : புறணிப்படலம் : மேலீடான மண்ணுக்கு அடிப்படையாகவுள்ள கெட்டியான நிலப்படலம்

hard rubber : (மின்.) கடின ரப்பர் : கந்தகம் கலந்து வலுவூட்டிய ரப்பர். இது மின்காப்புப் பொருளாகப்பயன்படுகிறது

hard-sized : கெட்டியளவு : ஈரம் மை ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் அமைந்த காகித வடிவளவு

hard solder: (பட்.) கடின பற்றாசு: செம்பும், துத்தநாகமும் அமைந்த ஒரு பற்றாசு. இதனைத் துத்தநாகப பற்றாசு என்றும் கூறுவர், பற்ற வைத்தல், ஒட்ட வைத்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன

hard top : (தானி.எந்.) உலோக முகடு: இரண்டு அல்லது நான்கு கதவுகளுள்ள பயணிகள் செல்லும் உத்து வண்டி. இதன் மேற்பகுதி உலோகத்தால் மூடப்பட்டிருக்கும்

hardware : (க.க.) உலோகப் பொருட்கள்: பூட்டுகள், கதவுக் கீல்கள், ஆணிகள் போன்ற வீடுகளுக்குத் தேவையான உலோக உறுப்புகள்

hardware: (கணிப்.) வன்கலம்/ வன்பொருள்