பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/350

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

வேலைப்பாடு செய்வதற்குரிய கருவிகளுக்கு இது பயன்படுகிறது

hourglass worm : (தானி.) மணல் வட்டில் இயக்காழி : மணல் சொறிந்து காலங்காட்டுங்கருவி போன்று புழுப்போல் வளைந்த உந்துகல இயக்காழி

house drain : (கம்.) வீட்டு வடிகால் : சாக்கடை நீரை ஏற்று, வடிகாலில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் அமைப்பு

housed string : (க.க.) அடைப்பு ஏணிப்படி : இரண்டு படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதிகளையும், ஏறுபடிக்காலின் மிதிகட்டைகளையும் ஏற்பதற்கென உட்புறத்தில் செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வரிப்பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ள ஏணிப்படி

house organ : (அச்சு.) அகச் செய்தியேடு : ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கால இடைவெளிகளில் வெளியிடும் செய்தியேடு. இதில் ஒரு பகுதியில் பொதுவான செய்திகளும், ஒரு பகுதியில் அந்த நிறுவனத்தின் பொருட்கள் பற்றிய விளம்பரங்களும் இடம்பெற்றிருக்கும்

house slant: (கம்.) வீட்டுச்சாய்வு நிலை வடிகுழாய் : வீட்டுக்கழிவு நீர்க்குழாய் இணைப்பை ஏற்பதற்கென ஒரு கழிவுநீர்க்காலில் உள்ள T அல்லது Y வடிவ இணைப்பு

housing : (எந்.) உள்ளிடம் : உரு வார்ப்படம், முதன்மை உறுப்பு, கொள்கலன், மேலுறை, பிற உறுப்புகளுக்கான ஆதாரம் போன்றவற்றைக் குறிக்கும் சொல்

howe truss : விதானத் தூலக்கட்டு : கூரைகளையும், பாலங்களையும் அமைப்பதற்குப் பயன்படும் ஒருவகைத் தூலக்கட்டு. இது மரம், எஃகு இவற்றினாலான கட்டுமானத்திற்கு மிகவும் ஏற்புடையது

hub : சக்கரக்குடம் : வண்டிச் சக்கரத்தின் குடம். இதன் வழியே சக்கரத்தின் அச்சு செல்லும். இது பெரும்பாலும் நீள் உருளை வடிவில் அமைந்திருக்கும்

hubbing : (பட்.) மென் எஃகு உருவாக்கம் : வார்ப்புப் படிவத்தை அல்லது வார்ப்படத்தைச் செய்வதற்கான கடினமான வார்ப்புப் படிவத்தை அல்லது 'குடத்தை' ஒரு குளிர்ந்த, மென்மையான எஃகுப் பாளமாக ஆக்குதல். இது பொதுவாக 1.27 செ.மீ. கனம் இருக்கும். இது சராசரியாக ஒரு சதுர அங்குலத்தில் 100டன் அழுத் தத்தைத் தாங்கவல்லது

hub dynamometer : (வானூ.) குடத் திறன்மானி: விமானத்தில் எஞ்சின் அழுத்தம், சுழற்சித்திறன் போன்ற உறுப்பாற்றல்களைக் கணிக்கும் கருவி. இது விமானத்தின் முற்செலுத்தியின் குடத்தினுள் பொருத்தப்பட்டிருக்கும்

hue (வண்.) வண்ணச் சாயல் : ஒரு வண்ணத்துடன் பிறிதொன்றைச் சேர்ப்பதால் ஏற்படும் வேறொரு வண்ணச் சாயல்

hull: (வானூ.) கப்பல் உடற்பகுதி: ஒரு பறக்கும் படகின் உடற்பகுதி, படகு நீரில் மிதக்கும் போது இந்தப்பகுதி மிதவையாகப் பயன்படும். இப்பகுதியில் மாலுமியும், பயணிகளும் அமர்ந்திருக்கலாம். மிதவையாகவும், உடற்பகுதியாகவும் ஒரே சமயத்தில் செயலுறுகிறது

hum . (மின்.) முரற்சி : ஒரு மின் பெருக்கியில் சிதறலான மின்காந்