பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/368

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

insulated: (க.க) காப்பிடப்பட்ட: (1) கட்டிடங்களை அல்லது தூண்களை மற்றக் கட்டிடங்களிலிருந்து அல்லது தீப்பற்றும் பொருள்களிலிருந்து பாதுகாப்பாகப் பிரித்து வைத்தல்

(2) மின்விசையோ வெப்பமோ பாயாதவாறு காப்பிட்டு வைத்தல்

insulating tape : (மின்) மின் காப்பு நாடா: மின் காப்புப் பொருளில் தோய்த்து மின் கடத்தாதவாறு செய்யப்பட்டுள்ள ஒட்டுப் பசையுடைய நாடாமின் இணைப்புக் கம்பி களையும், வெளியில் தெரியும் பகுதிகளையும் மூடி மறைக்கப் பயன்படுகிறது

insulating transformer : (மின்) மின்காப்பு மின்மாற்றி : கிளர் மின்னோட்டத்தை தாங்கிச் செல்லும் கம்பிச் சுருளிலிருந்து முதல் நிலை மின்னாற்றலைக் கவனமாகப் பிரித்தும் மின்காப்பு மின்மாற்றி, இதில் நிலை மின்னாற்றலுக்கும் கிளர்நிலை மின்னாற்றலுக்கும் இடையில் மின்னியல் உலோகத் தொடர்பு ஏதுமில்லை

insulating varnish : (மின்) மின்காப்பு மெருகெண்ணெய் : சிறந்த மின்காப்பு இயல்புகள் கொண்ட ஒரு தனிவகை மெரு கெண்ணெய். இது மின்சுருள்களிலும். சுருணைகளிலும் பயன்படுத்தப்படுகிறது

insulation (க.க.) தீக்காப்புப் பொருள் : தீப்பிடிக்காத பொருள்களில் ஒன்று. தீ விபத்துகளைத் தடுப்பதற்காகவும் வெப்ப குளிரி விரிந்து பாதுகாப்பதற்காகவும் கட்டிடக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது

insulation resistance : (மின்) மின்காப்புத் தடை : ஒரு மின்சுற்று வழியின் மின் கடத்திகளும் அல்லது ஓர் எந்திர்த்தின் மின் சுருணைக்கும், தரை, மண் அல்லது சட்டகத்திற்குமிடையிலான தடை

insulator : (மின்) மின் காப்பி: கடத்தாத கண்ணாடி, பீங்கான் போன்ற பொருள்கள்

insulin : (உட.) கணையச்சுரப்பு நீர் : கணையத்தில் சுரக்கும் நீர்ப் பொருள். இது தசைகள் இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்து, அதை உடைத்து எரியாற்றலாக மாற்ற உதவுகிறது. நீரிழிவு நோய் உடையவர்களிடம் இந்தப் பொருள் சுரப்பதில்லை. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது. எனவே, விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்ட கணையச் சுரப்பு நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசி முலம் செலுத்தப்படுகிறது

intaglio : செதுக்கு வேலைப்பாடு: மரம், உலோகம் போன்ற கடினமான பொருள்களின் மீது செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு. இது புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டது

intaglio printing: செதுக்குமுறை அச்சுக்கலை: செதுக்கு வேலைப் பாட்டு அச்சுப்பாளங்களிலிருந்து செதுக்கிய செப்புத் தகடுகளிலிருந்து அச்சிடும்முறை

intake : (தானி.எந்) கொள் பொருள் : வாயு அல்லது பெட்ரோல் எஞ்சினின் புழைவாயிலின் வழியே பாயும் எரிபொருள் கலவை

intake belt course : (க.க.) உள்வாய் வார்ப்பட்டை வழி : கட்டிடத்தின் இரு சுவர்களின் வேறுபட்ட திண்மைக்களுக்கிடையில் உள் வாயாகப் பயன்படும் வகையில் சித்திர வேலைப்பாடு வெட்டப்பட்ட வார்ப்பட்டை வழி

intake header (வானூ) உள் வாய் நுண்புழை : உந்துகலம்,