பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/373

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
371

பறத்தல், மேலேறுதல் இவற்றை வெற்றிகரமாகச் செய்து மீண்டும் தலைகீழாகப் பறக்கும் நிலைக்கு வருதல்

inverted outside loop (வானூ) தலைகீழ்ப்புற வளைவு: விமானம் தலைகீழாகப் பறப்பதிலிருந்து தொடங்கி, மேலே ஏறுதல், இயல் பாகப் புறத்தல், பாய்தல், இவற்றை வெற்றி கரமாகச் செய்து மீண்டும் தலைகீழாகப் பறக்கும் நிலைக்கு வருதல்

inverted spin; (வானூ) தலைகீழ் சுழற்சி: விமானம் தலைகீழ் நிலையிலிருந்து இயல்பாகச் சுழலும் ஓர் உத்தி

inverter: (மின்) மின்மாற்றி : நேர்மின்னோட்டத்தை மாறுமின்னோட்டமாக மாற்றுவதற்கான ஒரு மின் எந்திரவியல் அமைப்பு

involute : உட்சுருள் : வட்ட மையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளை கோட்ட முறும் வட்டவளைவு

involute gear : (எந்) உட்சுருள் பல்லிணை: உட்சுருள் முறைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பல்லிணை முறை. இது வட்டப்புள்ளி நெறிவளைவு முறையிலிருந்து வேறுபட்டது. இப்போது வட்டப் புள்ளி நெறி வளைவுமுறை பல்லிணைகளைவிட உட்சுருள் பல் லிணை முறையே அதிகம் பயன் படுத்தப்படுகிறது

involute teeth : உட்சுருள் பல்: பல்லிணையில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பல். இது உட்சுருள் வளைவினை அடிப்படையாகக் கொண்டது

involution: (தானி.) விசை அமுக்கம் : கணிதத்தில் ஓர் எண்ணை அந்த எண்ணாலேயே எத்தனை மடங்குக்கும் பெருக்கி, அந்த எண்ணை எத்தனை விசைப்பெருக்கத்திற்கும் உயர்த்துதல்

iodide : (வேதி.) அயோடைடு : பிறிதொரு தனிமத்துடன் அயோடின் சேர்ந்த கூட்டுக்கலவை. பொட்டாசியம் அயோடைடு போன்ற அமில உப்பு

iodine : (வேதி.) அயோடின் (கறையம்) : கரியப் பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப் படுத்தும் இயல்புடைய ஒரு தனிமம். இது சிலியன் உவர்க்கார நைட்ரேட்டிலிருந்தும், கடற்பாசிகளின் சாம்பலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. நோயாளி களுக்கு உள்ளே கொடுக்கவும் வெளியே பூசவும் மருந்தாகப் பயன்படுகிறது. சாயப்பொருள்களாலும் பயன்படுத்தப்படுகிறது

ion : (வேதி.) அயனி: (1) மின் பகுப்புச் சிதைவுக் கோட்பாடு பற்றியது. அதாவது, அமிலங்கள், காரங்கள், உப்புகள் ஆகிய அனைத்தின் மூலக்கூறுகளும் நீரிலும் வேறு சில கரைப்பான்களிலும் கரையும்போது பல்வேறு அளவுகளில் சிதைவுறுகின்றன என்னும் கோட்பாடு

(2) ஓர் அணு அதன் எலெக்ட்ரான்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழந்து, அதில் நேர்மின்னேற்றம் மட்டுமே இருக்குமாயின் அது அயனி எனப்படும்

ion burn : அயனி எரியழிவு : ஓர் எதிர்முனைக் கதிர்க்குழலின் ஒளித் திரையின் மையத்தில், எதிர் மின் அயனிகள் வலுவாகத் தாக்குவதால் உண்டாகும் நிற மாறுபாடு

ionic order : அயோனிய பாணிக் கட்டிடக் கலை: அயோனியாவைச் சேர்ந்தவர்கள் வகுத்து கட்டிடக் கலைப் பாணி. இதில் தூண் தலைப்பின் இரு புறமும் சுருள்