பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/404

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

முள்ள ஒரு மூலக்கூறு. பொதுவாக இது நீணட் சங்கிலி வடிவ மீச்சேர்மங்களைக் குறிக்கும். மீச்சேர்மங்கள் என்பவை ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணித்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலேயே அனுத்திரள் எடைமானமும், இயற்பியல் பண்பும் மட்டும் கொண்ட மாறுபட்ட பிறிதுருச் சேர்மங்கள் ஆகும்

line cut : (அச்சு.) வரிவெட்டு: அச்சுக்கலையில், துத்தநாகத்தில் வரிகளை அல்லது பரப்புகளை செதுக்குதல்

lined board: உட்பொதிவு அட்டை: மெல்லிய காகிதத்தினால் உட்பொதிவு செய்த அட்டை

line drop; (மின்.) மின்வழி அழுத்தம் : மின்கம்பிகள் வாயிலாக மின்னோட்டத்தைச் செலுத்தும் போது பயன்படுத்தப்படும் மின்னழுத்தம்

line engraving : (அச்சு) வரி உருவப்படம் : அச்சுப் பள்ளத்தில் செதுக்கு வரி வேலைப்பாடு மூலம் படங்களை அல்லது எழுத்துக்களை அச்சிடுதல்

line frequency : வரி அலைவெண் : தொலைக்காட்சியில் ஒரு வினாடியில் அலகிடும் வரிகளின் எண்ணிக்கை

line gauge : (அச்சு) வரி அளவி: அச்சுக் கலைஞர்கள் பயன்படுத்தும் ஓர் அளவுகோல். இதில் அளவுகள் பிக்கா, நான்பாரைல்ஸ் என்னும் அச்செழுத்து அளவு அலகுகளில் குறிக்கப் பட்டிருக்கும்

linen finish : (அச்சு) துணிக் காகிதம் : துணி போன்று இருக்கத்தக்க முறையில் தயாரிக்கப்பட்ட காகிதம் அல்லது அட்டை

line scroll - (க.க) நார்மடி அணி: கதவுகளை அழகுபடுத்துவதற்கான நார்மடிச் சுருள் போன்ற அலங்காரவேலைப்பாடு

line of action : செயலியக்கக் கோடு : ஒரு விசையின் செயலியக்கக் கோடு என்பது, அந்த ஒரு பொருண்மையைப் புள்ளியின் மீது செயற்படும் திசை என்று பொருள்படும்

line pickup : தந்திவட இணைவு : தந்தி, தொலைபேசி அறிகுறியீடுகளுடன் தொலை நோக்கிக் குறியீடுகளை ஒருங்கே அனுப்பும்படி பொருந்திய தந்திவட இணைவு போன்ற உலோக மின்கடத்திகள் வாயிலாகச் சைகைகளை அனுப் பீடு செய்தல்

line pipe : (கம்.) கூம்பு குழாய் : பின்னோக்கிச் சரிந்து கூம்பின் இழையுள்ள இணைப்புடைய தனி வகைக் குழாய். இது பொதுவாக அதிக நீளத் திருகிழையுடையதாக இருக்கும்

liner : (எந்.) புறவுறை : ஓர் எஞ்சின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றிவிடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும்

line shaft : (எந்.) தொடர் சுழல் தண்டு: பல சுழல் தண்டுகள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ள ஒரு தொடர். இது பிரதான சுழல் தண்டாக இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்

lines of force : (மின்) விசைக் கோடுகள் : ஒரு காந்தவிசைக் கோடு வடதிசைகாட்டும் துருவம். அதைச் சுற்றியுள்ள மற்றத் துருவங்களின் பாதிப்பினால் காட்டுகின்ற திசையினைக் குறிப்பதாகும்

lining : (அச்சு.) வரிசையமைப்பு: அச்செழுத்து முகப்புகளை கிடைமட்டத்தில் துல்லியமாக வரிசைப்படுத்தி அமைத்தல்