பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/490

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

plastics: குழைபொருட் குழுமம்: நிலக்கீல் முதல் சீமைக்காரை வரையில் பல்வேறு குழைவுப் பொருட்களின் தொகுதி. இவை சில அம்சங்களில் இயற்கையான பிசின்களை ஒத்திருப்பவை. எனினும், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டவை. குழைம ஆதாரப் பொருட்களில் பல கூட்டிணைப் பொருட்கள் உள்ளன. எனவே, குழைமப் பொருட்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்னிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இவற்றின் முக்கிய பிரிவுகளாவன

1. வெப்ப உருக்குழைமம் : வெப்ப மூட்டப் பெற்ற நிலையில் உருக்கொடுக்கப் பெற்ற குழைமம். அமினோ, பாலிஸ்டர், ஆல்க்கிட், பைனோலிக் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை 2. வெப்பியல் குழைமம்: வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் தன்மையுடைய குழைமம். ஸ்டைரீன் மீச்சேர்மங்கள், கூட்டு மீச்சேர்மங்கள், செல்லுலோசிக்ஸ். பாலித்திலீன், வினைல், நைலான்கள், பல்வேறு புளோரோ கார்பன்கள் இவ்வகையைச் சேர்ந்தவை

குழைமப் பொருள் குடும்பத்து ஒவ்வொரு பொருளுக்கும் சில குறிப்பிட்ட பண்புகள் உண்டு. சில கடினப் பரப்புடையவை; சில அரிமான எதிர்ப்புடையவை; சில நெகிழ்திறனுடையவை; சில முரடானவை; சில மின் அழுத்தத்தைத் தாங்கக் கூடியவை

plastic surgery: ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை: உடலில் முகம் போன்ற உறுப்புகளில் இழந்த அல்லது சேதமடைந்த பகுதிகளை அறுவைச் சிகிச்சை மூலம் புதுப்பித்தல் அல்லது புத்துருவாக்கம் செய்தல்

plastic wood: (மர.வே) குழைம மரக்கூழ்: காற்றுப்பட்டவுடனேயே கடினமாகிவிடக்கூடிய மரக்கூழ். இது வெடிப்புகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது. இதனைப் பூசியவுடனேயே அதில் வண்ணம் பூசலாம்

plastisol: (குழை.) பிளாஸ்டி சோல்: குழைமையாக்கும் பொருட்களுடன் கலந்து கலவைகளாகத் தயாரிக்கப்படும் எந்திரக் குழைமப் பொருள். இதைக் கொண்டு வார்ப்படம் செய்யலாம்; சுருள்கள் தயாரிக்கலாம். நெகிழ் திறனுடைய வார்ப்படங்கள் தயாரிக்கப் பெரும்பாலும் பயன்படுகிறது

plate: (மின்.) மின் தகடு: ஒரு வெற்றிடக் குழலின் நேர்முனை. ஒரு குழலில் எலெக்ட்ரான்களை ஈர்க்கக்கூடிய பகுதி

plate circuit: (இயற்.) தகட்டு மின்சுற்றுவழி: (1) மின்தகட்டிலிருந்து தகட்டு மின்னோட்டம் சுற்றும் ஒரு முழுமையான மின்சுற்று வழி

(2) ஒரு வெற்றிடச் சூழலில் தகட்டு விசை சிதறுகிற ஒரு மின்சுற்று வழி. இதில், எதிர்முனை தகடு, மின்சுமைகள், விசை ஆதாரம், இவை தொடர்பான பகுதிகள் ஆகியவை அடங்கும்

plate clutch: (தானி;எந்.) தகட்டு ஊடிணைப்பி: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகடுகளின் மூலம் விசையை அனுப்புகிற ஊடிணைப்பி. இத்தகடுகள் விற்சுருள்களின் அழுத்தத்தின் மூலம் பற்றி வைத்துக் கொள்ளப்படுகின்றன

plate condenser: தகட்டு மின் விசையேற்றி: மாற்று உலோகத் தகடுகளை இணைத்து இரு மின் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள மின் விசையேற்றி, இத்தகட்டுகள் அப்பிரகம், மெழுகேற்றிய தாள், போன்றவற்றாலானதாக இருக்கும்