பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54

வரையின் நுழைவாயிலில், அல்லது சிமென்ட் பூசிய ஒடுபாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால். இத்தகைய வடிகால் பொதுவாக 4" அல்லது அதற்கு அதிகமான வார்ப்பிரும்புக் குழாயினால் அமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு வடிநீர்க்காலுடன் இணைக்கப்பட்டிருக்கும்

arena : (க. க.) வட்டரங்கு : ரோமில் இருந்தது போன்று, திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம். இங்கு பெரும்பாலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்

argon : (வேதி.) மடியம்: வளிமண்டலத்தின் அணுஎடை எண் 18 உடைய இயக்கத் திறனற்ற வாயு. இது நிறமற்றது; நைட்ரஜனை ஒத்திருப்பது; சாதாரணக் காற்றில் 0.9% அளவுக்குக் கலந்திருக்கிறது. திரவக் காற்றினை வடித்துப் பிரித்தல் மூலம் பெறப்படுகிறது. வெண்சுடர் மின் விளக்குகளில் நிரப்புவதற்காக இந்த வாயு பயன்படுகிறது

armature : (மின்.) மின்னகம்: ஒரு மின் ஆக்கப் பொறியின் கருப் பகுதி

armature coil : (மின்.) மின்னகச் சுருள்: ஒரு திசைமாற்றுப் பகுதியிலிருந்து இன்னொரு திசைமாற்றுப் பகுதிக்குச் செல்லும் சுருணையின் பகுதி; அல்லது, மின்னகத்தின் மைய உட்புரியின் காடிகளுக்குள் பொருந்துமாறு செய்வதற்குத் தேவையான துல்லியமான வடிவில் தயாரிக்கப்பட்ட மின்னகச் சுருணையின் ஒரு பகுதி

armature core (மின்.) மின்னக மைய உட்புரி: கம்பி போன்ற ஒரு சூழ்ந்த உலோகத்தின் மைய உட்புரி, இது ஒரு காந்தத்தின் துருவங்களின் அருகே சுழன்று கொண்டிருக்கும்

armature current : (மின்.) மின்னக மின்னோட்டம்: பார்க்க: (Current) மின்னோட்டம்

armature disks : (மின்.) மின்னக வட்டத் தகடு: பார்க்க: (Laminated core) மென் தகட்டு மைய உட்புரி

armature of a magnet : (மின்.) காந்த மின்னகம்: காந்தத் தன்மையைப் பாதுகாப்பதற்காக ஒரு குதிரை லாட வடிவக் காந்தத்தின் துருவங்களுக்கிடையே வைக்கப்பட்ட இரும்பு அல்லது எஃகுத் துண்டு; அல்லது ஒரு மணியின் மின்னகத்தைப் போன்று, ஒரு மின் காந்தத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஓர் அசையும் இரும்பு அல்லது எஃகுத் துண்டு

armature reaction : (மின்.) மின்னக எதிர்வினை: ஒரு மின்னாக்கியின் காந்தச் சுற்றுக்கு எதிரான ஒருவகை எதிர்வினை. இது மின்னகத்தைச் சுழற்றுவதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது

armature shaft : (மின்.) மின்னகத் தண்டு: ஒர் இயக்கியின் அல்லது மின்னாக்கியின் மைய உறுப்புகளின் அமைப்புப் பகுதிகள் இந்தத் தண்டினைச் சுற்றி ஒருங்கிணைக்கப்படுகின்றன

armature slots : (மின்.) மின்னகக் காடிகள்: மின்னகத்தின் சூழகங்கள் அல்லது உட்புழைகள். இவை ஒரு சுருளினைச் சுற்றுவதற்கு இடமளிக்கிறது

armature spider : (மின்.)மின்னக எண்காலி: ஆரைக்கதிர்க் கைகளமைந்த சட்டகம். இது ஒர் இயக்கியை அல்லது மின்னாக்கியை அதன் தண்டில் தாங்கி நிற்கிறது