பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/564

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

562

silver white : வெள்ளிப் பூச்சு: வெண் ஈயத்தின் தூய்மையான வகை, வெள்ளிப் பூச்சுக் கலவையாகப் பயன்படுகிறது. தூளாக்கிய நேர்த்தியான சிலிக்கா

similar poles : (மின்.) ஒத்த துருவங்கள் : ஒன்றையொன்று எதிர்க்கும் இரு காந்தத் துருவங்கள் ஒத்த துருவங்கள் எனப்படும். இவை காந்த முறையில் ஒத்திருப்பவை

simple equation: (கணி.) நேர் சமன்பாடு : கணிதத்தில் விசைப் பெருக்க உரு இல்லா சமன்பாடு

simple machine : (எந்.) விசையாக்கமற்ற பொறி : விசை உற்பத்தி செய்யாமல், நெம்புகோல், புல்லி, சாய்தளம், திருகு, சக்கரம் அச்சு, ஆப்பு போன்றவற்றில் ஒன்றின் செயலினால் இயங்கும் பொறி

sinad: (மின்.) சினாட்: ஒரு வானொலி வாங்கியின் கூருணர் திறனை அளவிடுவதற்கான ஒரு திட்ட அளவு முறை. கணிக்கப்பட்ட உற்பத்தி அளவில் 50% வரை சமிக்ஞை உற்பத்தி செய்யும் வகையில் வானொலி வாங்கியில் சீரமைவு செய்யப்படுகிறது. இந்தச் சூழ்நிலைகளில் செலுத்தப்படும் சைகையின் நுண் மின்னழுத்தங்களின் எண்ணிக்கை 12 டிபிசினாட் அல்லது பயனுறு கூருணர்வுத் திறன் எனக் குறிக்கப்படும்

sine: (கணி.) நிமிர்வீதம்: செங்கோண முக்கோணத்தின் மீது சிறிதுகோண எதிர் வரை அடி வரை வீத அளவு

sine bar: (கணி.)நிமிர்வீத அளவு கருவி: கோணங்களைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு சாதனம்

sine wave: (மின்.) எதிர்வ அலை: ஒரே அலைவெண் மாற்று மின்னோட்டத்தின் அலை வடிவம். ஒரு கோணம் 360° வழியே சுழலும் போது அக்கோணத்தின் எதிர்வம் (சைன் வடிவம்) தொட்டுச் செல்லும் அனைத்துப் புள்ளிகளையும் குறிக்கும் வரைபடம்

singing flame: (இயற்) இசையொலி அனற் பிழப்பு: குழாயினிடமாக இசையொலி எழுப்பும் அனற்பிழம்பு

singing sands : (இயற்.) ஒலிப்புப் பருமணல்: நடக்கும்போது பண்ணாரொலி எழுப்பத்தக்க சீரளவுடைய பருமணல்

single acting: (எந்.) ஒரு திசை இயக்கம்: நீராவி எந்திர வகையில் உந்து தண்டின் ஒரு பக்கம் மட்டுமே நீராவி ஏற்கிற இயக்கம்

single bar current transformer: ஒற்றைச்சலாகை மின்னோட்ட மாற்றி

single contact lamp: (மின்.) ஒற்றைத் தொடுமுனை விளக்கு: உந்து ஊர்திகளில் முக்கியமாகப் விளக்கு, இதில் அடிப்பகுதியின் முனையில் ஒரு தொடு முனை இருக்கும். அடிப்பகுதியின் பக்கங்களும், குதை குழியும் மின் சுற்று வழியை நிறைவு செய்கின்றன

single cut file: (உலோ.வே.) ஒரு திசை வெட்டுவரி அரம் : ஒரு திசை வெட்டுவரிகளை உடைய அரம். இதில் பற்கள் அரத்தின் முகப்புக்கு மூலைவிட்டமாக 65° கோணத்தில் ஒரே திசையில் இணையாக வெட்டப்பட்டிருக்கும்

single ended amplifier: (மின்.) ஒற்றைமுனை மின்மிகைப்பி: தனது இறுதி மின்விசைக் கட்டத்தில் தனியொரு வெற்றிடக்குழலை அல்லது மின்மப் பெருக்கியை