பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/566

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

564

எல்லை வரையறுக்கப்பட்டுள்ள இடம்

size: (1) தாள்மெருகு: காகிதத்திற்கு மெருகுப்பசையிட்டு பளபளப்பாக்குவதற்குப் பயன்படும் பிசின் பொருள் (2) தாள் வடிவளவு - குறிப்பிட்ட நீள அகல அளவுடைய தாள் வடிவளவு

size control: வடிவளவு கட்டுப்பாடு: தொலைக்காட்சியில் கிடைமட்டத்திலும், செங்குத்தாகவும் படத்தின் வடிவளவை அதிகரிக்கவோ குறைக்கவோ அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அமைவு

sizing: வகைப்படுத்துதல்: காகிதத்தை அதன் நீர் அல்லது மை எதிர்ப்புத் தன்மைக்கேற்ப வகை மாதிரிப்படுத்துதல்

skeletonizing: (அச்சு.) மென்கீற்று அச்சுருவாக்கம்: ஓர் அச்சுப் படிவத்தில் வண்ணப் பகுதிகளை நீக்கிவிட்டு, மென்கீற்று அச்சுருவை மட்டும் பதிவு செய்வதற்காகப் பூட்டி வைத்தல். இதனால் பல்வேறு வண்ணங்களில் அச்சிட இயலும்

skelp: (உலோ.) குழாய்த் தகடு: குழாய்கள் செய்வதற்கான எஃகு அல்லது இரும்புத் தகடு

sketch: திட்ட உருவரை: முதல்நிலை மாதிரி, புனையா ஓவியம், நினைவு வரிக்குறிப்பு

sketch outline: புனையா ஓவியம் : நுணுக்க விளக்கங்களின்றி மேலோட்டமாக வரைந்த ஒரு திட்ட உருவரை

skew: (எந்.) ஓரச்சாய்வு: செங்கோணத்தில் இல்லாத சாய்வு

skew back: (க.க.) சாய்வுதைவு: கவானின் இருமுனைகளிலுமுள்ள சாய்வுதைவுப் பரப்பு

skew back saw : சாய்வுதைவு ரம்பம்: எடை குறைவாக இருக்கும் வகையில் முதுகுப்புறம் வளைந்துள்ள கைரம்பம்

skew bridge: சாய்குறுக்குப்பாலம்: இரு புறப்பக்கங்களின்டயே சாய்வாகச் செல்லும் கட்டுமானம்

skew chisel: சாய்வுளி: சாய்வு விளிம்புத் தறிப்புக் கருவி

skew curve: முப்படை சாய்வு வளைவு: தன் தளங்கடந்த சாய்வுடைய மூவளவை வளைவு

skew gear: (பல்லி.) சாய்வு பல்லிணை: சுழல் பற்களுடைய பல்லிணை. இவை இன்று பெரும்பாலும் உந்து ஊர்திகளின் பின்புற இருசுகளில் பயன்படுத்தப்படுன்றன. இவை வலிமையை அதிகரித்து, உராய்வற்ற ஓசையற்ற இயக்கத்திற்கு உதவுகின்றன

skew wheel: சாய்பற்சரிவுச் சக்கரம்: ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சாய் பற்சக்கர அமைவு

skid: (வானூ.) விமானச் சறுக்குச் சக்கரம்: விமானம் ஓடு பாதையில் ஓடும்போது அல்லது தரையிறங்கும் போது அதற்கு உதவியாக இருக்கும் தரையிறங்கு பல்லிணையின் ஓர் உறுப்பு. உந்துவிசைக் கட்டை- உந்து ஊர்தியில் சக்கரத்தை உந்தித் தள்ளும் சாய்வு உந்துவிசைக் கட்டை

skid fan : சக்கரச் சுழற்சித் தடை காப்பு:

skid fin: (வானூ.) சறுக்கு நிமிர் நேர்விளிம்பு: விமானத்தில் கிடைமட்ட உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்காகச் சிறகுக்கு மேலே பொருத்தப்பட்டுள்ள நிமிர் நேர் விளிம்புடைய தகடு