பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
55

armature varnish: (மின்.) மின்னக வண்ண மெருகு: ஈரம் பதிப்பதற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக மின்னகச் சுருணைகளுக்குப் பூச்சு இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்காப்பு வண்ண மெருகு

armature winding: (மின்.) மின்னகச் சுருணை: பார்க்க: (coil) சுருள்

armored cable (மின்.) கவசக் கம்பிவடம்: நெகிழ் திறனுடைய உலோக உறையினுள் அமைந்த மின் காப்பிடப்பட்ட கம்பி

Armstrong Edwin Howard: ஆம்ஸ்டிராங், எட்வின் ஹோவர்ட் (1890-1954): வானொலித் துறையில் புகழ்பெற்ற அமெரிக்கப் புத்தமைப்பாளர். கேளா மிகு உயர்விசை அலை வானொலி, எஃப். எம். வானொலி போன்ற ஒலியுணர்வை மேம்படுத்தும் பின்னுாட்ட அலைப்பு மின்சுற்றுவழிகளைக் கண்டுபிடித்துப் புகழ் பெற்றவர்

aromatic: நறுமண மருந்துப் பொருள்: நறுமணமும், இன்சுவையுமுள்ள மருந்துப் பொருள். இவை வேதியியல் கூட்டுப் பொருள்கள். இவற்றின் மூலக்கூறுகளில் கார்பன் அணுக்கள் சிலசமயம்வேறு அணுக்கள் வளைய வடிவில் அமைந்திருக்கும். சாம்பிராணி எண்ணெய் (பென்சீன்) இந்த வகையில் மிக எளிமையான கூட்டுப் பொருள்

arras: ஓவியத்திரை: அலங்காரச் சுவர் மறைப்புச் சீலை

arrester: (எந்.) தடுப்புப் பொருள்/தடுப்பான்: இயக்கத்தை நிறுத்துவதற்கு அல்ல்து மெதுவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் எந்திரவியல் சாதனம்

arresting gear: (வானூ.) தடுப்புப் பல்லிணை: விமானம் ஒரு குறிப்பிட்ட இடப்பகுதிக்குள் தரையிறங்குவதற்கு இயல்விப்பதற்காக விமானத்திலும், தரையிறங்கும் பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ள பல்லிணை

arresting hook: (வானூ.) தடுப்புக் கொக்கி: விமானம் தரையிறங்கும்போது தடுப்புப் பல்லிணையில் மாட்டிக்கொள்ளும் வகையில் விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொக்கி

arris: (வானூ.) இணை விளிம்பு வரை: ஒரு வட்டவடிவத் தூணின் இரு இடை வழிகளிடையிலான மேல்விரை. ஒரு புறக்கோணம், விளிம்பு அல்லது மேல்வரை

arrow heads: அம்புத் தலை: பரிமாணக்கோடுகளின் இறுதி முனைகளின் கூர்நுனிகள். இவை, அளவீடு குறிக்கின்ற இடத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவன

arsenal process: (உலோ.) படைக்கொட்டில் செய்முறை: இது ஈயப்பூச்சுக்குரிய ஒரு செய்முறை. இதில் ஈயம் பூசவேண்டிய எஃகுத் தகடு, முதலில் கந்தக அமிலமும், நீரும் கலந்த ஒரு கலவையில் ஊறவைக்கப்படுகிறது; பின்னர் துப்புரவாக்கப்படுகிறது. அடுத்து, துத்தநாகமும், ஹைடிரோகுளோரிக் அமிலமும் கலந்த ஒரு கலவைப் பொருளில் தோய்க்கப்படுகிறது. அதன்பின் 80% ஈயமும், 20% வெள்ளீயமும் கலந்த உருகிய கலவையில் நன்கு முலாம் பூச்சு உண்டாக்கும் வரையில் தோய்க்கப்படுகிறது

arsenic: (வேதி.) உள்ளியம்: வெள்ளி போன்ற நிறமுடைய, படிக வடிவிலான உலோகத்தின் தோற்ற வடிவுடைய பொருள். இது சில சமயம் இயற்கையில் கிடைக்கிறது. வதங்கிய உள்ளியத்