பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/575

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
573

solid angle : பல்தளக் கோளம் : ஒரு புள்ளியில் சந்திக்கும் பல்தளக் கோளங்களின் தொகுதி

Solid bearing: (எந்.)திடத்தாங்கி: ஒரே துண்டான கெட்டியான தாங்கி. திடத்தாங்கிகள் பொருத்தப்படும் உறுப்புகளில் திடத்தாங்கிகளை அழுத்திப் பொருத்தியதும் அது இருக உருளை எனப்படும்

solid friction : (எந்.) திடஉராய்வு : ஒரு திடப்பொருளின் மேற்பரப்பு, இன்னொரு திடப் பொருளின மேற்பரப்பின் குறுக்கே நகரும்போது உண்டாகும் உராய்வு

solid propellant : ( விண்.) திட முற்செலுத்து பொருள் : திடநிலையிலுள்ள ஒரு ராக்கெட் முற்செலுத்து பொருள். இது நிலையான வேதியியல் கனற்சிக்குத் தேவையான அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கும்

solo : (வானூ.) தனிப்பறப்பு : விமானத்தில் துணையில்லாமல் தனியாகவே பறத்தல்

soluble : கரையத்தக்க : ஒரு திரவத்தில் கரையத்தக்க

soluble glass: படிக்கதிக் கலவை: செயற்கைக் கற்களைக் கடினப்படுத்தத் தயாரிக்கும் வெடியப் படிக்ககிக் கலவை

soluble oil : (உலோ.) கரையும் எண்ணெய் : தண்ணிரைச் சேர்க்கும்போது எண்ணெயும் நீரும் கலந்த பசைக் குழம்பு

sonic barrier : (இயற்.) ஒலிவிசை எதிர் அழுத்தம் : ஒலிவிசையடுத்து வரும் வேகங்களுக்குக் காற்று எதிர் வழங்கும் எதிரழுத்த விசை

solute : (வேதி.) கரைவம்: கரைசலில் கரைந்துள்ள பொருள்

solution : (வேதி.) கரைசல் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருட்கள் பிரிக்க முடியாதவாறு ஒன்றாகக் கலந்து கரைந்த கலவை

solvent : (வேதி.) கரைமம் : ஒரு பொருளைக் கரைப்பதற்குப் பயன்படும் மற்றொரு பொருள் கரைமம் ஆகும். உப்பை நீர் கரைக்கும். நீர் ஒரு கரைமம்

sonic speed (விண்.) ஒலி வேகம் : ஒலி செல்லும் வேகம்

soot : புகைக்கரிக் கறை

sorts : (அச்சு). தனி எழுத்துரு : தனி எழுத்துருத் தொகுதி

sounder: (மின்.) கடல் ஆழமானி: எதிரொலி நேரம் மூலம் கடலின் ஆழத்தை அறியும் கருவி

sounder magnet : (மின்.) ஆழ் தட ஆய்வுக் காந்தம் : ஒரு தந்தி ஆய்தட ஆய்வுக் கருவியிலுள்ள மின்காந்தம்

sounding - line (sounding machine) கடலாழமானி: கடலின் ஆழம் காணப் பயன்படும் கருவி

sounding balloon : (வானூ.) மீவிசும்பு ஆய்வுக் கூண்டு : மீவிசும்பு நிலை ஆய்வுக்காக அனுப்பப்படும் சிறுகூண்டு

sounding - board : ஒலித்தடைத் தட்டி: மேடைமீது ஒலிபரவுதலைத் தடுத்து முன் செலுத்தும் மென்பலகை

sounding-lead: அடி ஈயக்குண்டு: கடல் ஆழமானியின் அடிஈயக் குண்டு

sounding rocket : வாயுமண்டல ஆய்வு ராக்கெட்: வாயுமண்டலதின் மேற்பகுதியின் நிலைமைகளை ஆராய்வதற்காக அனுப்பப்படும் ராக்கெட்