பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58

aspen: (மர.) காட்டரசு: இது ஒரு மர வகை. இதனை பாப்புலஸ் டிரிமுலாய்டெஸ்(populus tremuloides) அல்லது பர்ப்புலஸ் கிராண்டிடன் அட்டா (populus grandiden tatac) எனும் அறிவியல் பெயரில் அழைப்பர். இது அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் காணப்படும். ஒரு மரம். இது ஊசியிலை மரம் 'ஹெம்லாக்' என்ற தாவரம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காகிதக்கூழ் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மற்றவகையில் இதற்கு வாணிக மதிப்பு எதுவுமில்லை. இந்த மரம் 12-15 மீட்டர் உயரம் வளரும். இது எளிதில் முறியக்கூடியது. ஒருகன அடி மரத்தின் எடை 11-3 கிலோ அளவு இருக்கும்

asphalt: (கனி.) புகைக்கீல்: இது ஒரு கனிம நிலக்கீல்; இது நிலக்கீலார்ந்த தன்மையுடையது. இதனை தளத்திற்கும், கூரைக்கும் பயன்படுத்துகிறார்கள்

asphalt oil : (வேதி.) புகைக்கீல் எண்ணெய்: புகைக்கீல் அல்லது ஒரு புகைக்கீல் ஆதாரப்பொருள் அடங்கிய ஒருவகை எண்ணெய். இது கன்மெழுகை ஆதாரப்பொருளாகக் கொண்ட எண்ணெயிலிருந்து வேறுபட்டது

asphaltum: (கனி.) ஆஸ்பால்ட்டம்: இது ஒரு நிலக்கீல். இது எளிதில் தீப்பற்றக்கூடிய கனிமப் பொருள். இது கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்; எளிதில் உடையக் கூடியது: பளபளப்பானது; ஆஸ்பால்ட், ஆஸ்பால்ட்டம் ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப்பயன் படுத்தப்படுகின்றன. இது முக்கியமாக டிரினிடாடிலும், வெனிசூலாவிலும் கிடைக்கிறது. நிலக்கரி போல் தோற்றமளிக்கும் ஒருவகை ஆஸ்பால்ட்டம் ஊட்டாவில் கிடைக்கிறது. இது 'கில்சோ னைட்' என அழைக்கப்படுகிறது

alphaltum varnish: ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய்: இதில் மிகச் சிறந்த தரம் வாய்ந்தது 'கில்சோனைட்' எனப்படும். இது கருப்பு நிறமுடையது; விலை சற்று அதிகம். இது விரைவாகக் காய வேண்டியதாக இருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஜப்பானிய மெருகு போன்ற விளைவினைக் கொடுக்கும். சாதாரண ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய் முக்கியமாக வெப்பத்தையும் அமிலத் தன்மையையும் எதிர்க்கும் இயல்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மரம் போன்ற ஈர்க்கும் பொருள் மீது இதனைப் பூசினால் இதன் நிறம் கருப்பாகும். ஆனால், உலோகப் பரப்பின் மீது பூசும் போது அதன் நிறம் பழுப்பாக இருக்கும். மின்கலங்கள் தயாரிப்பதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது

asphyxia: (நோ.) மூச்சுத்தடை: இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் ஏற்படும் மூச்சுத் திணறல்

assay: கலவை அளவு மதிப்பீடு: தாதுப்பொருளில் விலையுயர்ந்த உலோகம் எந்த அளவு அடங்கியிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகத் தாதுப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்தல்

assemble: (பட்.) (ஒன்றிணைத்தல்): ஒர் எந்திரத்தின் உறுப்புகளை அல்லது வேறு உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் பகுதிகளை அதனதன் இடத்தில் ஒருங்கிணைத்து வைத்தல்

assembled car: (தானி.) ஒன்றிணைத்த உந்து: எஞ்சின்கள், அச்சுகள், இயக்குபிடிப் பல்லிணை, உடல் போன்ற பல்வேறு உறுப்புகளை தனித்தனித் தயாரிப்பாளர்