பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/611

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
609

யிடப்பட வேண்டுமென்பதற்கான குறியீடு

tap bolt: (எந்) புரியிடப்பட்ட தாழ்துளை: பொதுவில் முழு நீளத்துக்கும் புரியிடப்பட்ட தாழ், தலையின் அடிப்புறத்திலும் படியும் இடத்திலும் மட்டும் சீர் செய்யப்பட்டது. இந்தத் தாழ்களின் தலை சதுர அல்லது அறுகோண வடிவில் இருக்கும்

tape (பொறி.) அளவிடு பட்டை: லினன்.அல்லது பருத்தி அல்லது மெல்லிய உருக்கினால் செய்யப்பட்ட வளையத்தக்க அளவுச் சாதனம். பொதுவில் வட்ட வடிவ உறைக்குள் இருக்கும். பயன்பாட்டுக்குப்பின் மீண்டும் சுருட்டி உள்ளே அடக்கி விடலாம்

taper: (எந்) குவிந்தமைதல்: படிப்படியாக, சீராக அள்வு குறுகிக் கொண்டு வருதல், குவிந்த குழிவு. குவிந்த தண்டு, குவிந்த நடுத்தண்டு என்பது போல

tap recorder:(மின்) நாடா ஒலிப்பதிவுக் கருவி: இது ஒரு மின்ணுவியல் ஒலிப்பதிவுக் கருவி. இதில் ஒலிச் சமிக்ஞைகள், மின்னியல் சமிக்ஞைகளாக மாற்றப்படு கின்றன. இந்த மின்னியல் சமிக்ஞைகள், ஒரு தனிவகை நாடாவில் ஒரு காந்தத்தோரணியாகப் பதிவாகின்றன

taper angle: (உலோ.) கூர்ங் கோணம்: நுணிநோக்கிச் சிறுத்துச் செல்கிற பரப்பளவுகளுக்கிடையிலான உள்ளடக்குக் கோணம்

taper attachement: (எந்.) குவிய இணைப்பு: குலிந்து அமையும் வகையில் கடைவதற்கு ஒரு லேத்தில் பொருத்துவதற்கான சாதனம். அளவுக்குத் தக்கபடி இதில் மாற்றம் செய்ய இயலும்

tapared-shank drill: (எந்.) குவியத் தண்டுக் குடைவி: குவிந்து செல்லும் நடுத்தாங்கி கெர்ண்ட், சாதாரண குடைவுச் சுழல்வியில் அல்லது குழியில் பயன்படுத்தப்படுகிற, திரும்புகிற அல்லது அப்படி அல்லாத குடைவி

tapered spindle: (எந்) குவியத் தண்டு: குவியத்தண்டு வேலைக் கருவி அல்லது தண்டைப் பொருத்தும் வகையில் ஒரு புறத்தில் உள் பகுதியில் குவிந்து அமைந்த துளை உள்ள தண்டு

taper gauge: (எந்.) குவியளவு மானி: உள்ளே அல்லது வெளியே எந்த அளவுக்கு குவிந்து அமைந்துள்ளது என்பதை துல்லியமாக அளக்கும் கருவி

taper per ft (எந்) அடி வீதம் குவிதல்: குவிந்தமைவது எந்த அளவில் உள்ளதை வெளிப்படுத்தும் முறை, அதாவது ஜார்னோ குவிவு (அல்லது குவியம்) அடிக்கு .6" பிரவுன் மற்றும் ஷார்ப் குவிவு அடிக்கு .5" பத்து மட்டும் வராது

taper pin: (எந்:பொறி.) குவிய ஆணி: உருண்டையான உலோகக் கம்பிகளிலிருந்து செய்யப்படுவது. ஒரு தண்டுடன் ஒரு உறுப்பை பிணைப்பதற்குப் பயன்படுவது. 1 முதல் 10 வரை எண் அடிப்படையில் அளவு வரிசைப்படுத்தப்பட் டது. எண் 1 என்பது அகலப் பகுதியில் 396 செ.மீ.குறுக்களவும் 2 முதல் 2.54செ.மீ. நீளமும் கொண்டது. எண் 10 என்பது அகலப்பகுதியில் 1.8செ.மீ. குறுக்களவும் 3.8 முதல் 15.செ.மீ. நீளமும் கொண்டது

taper-pin drills: (உலோ.வே) குவிய ஆணிதுளை கருவி: 30செ.மீக்கு .6.செ.மீ. வீதம் குவிந்து அமைந்த, பல் போன்ற கூரான விளிம்புகளைக் கொண்ட துளையிடு கருவி. கட்டி உலோகத்திலி