பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/646

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

644

வோல்ஃப்ரமைட்டிலிருந்து பெறப்படும் உலோகம். இது உலோக வடிவில் இரும்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. கூழ்ம வடிவில் இது மின்பல்புக்கு இழை தயாரிக்கப் பயன்படுகிறது. சோடியம் டங்ஸ்டே (Na2W04) வடிவில் மரம், துணிகளின் மீது தீப்பிடிக்காத தன்மை அளிக்கப் பயன்படுகிறது

tungsten carbide : டங்ஸ்டன் கார்பைட் : மீதேன் அல்லது ஹைட்ரோ கார்பன் வாயுவில் வைத்து பழுக்கக் காய்ச்சிய டங்ஸ்டனை கரிம்முறையில் தயாரிக்கப்பட்ட இரும்புப் பழுப்புப் பவுடர். இது தேய்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. அல்லது இது கோபால்ட் அல்லது வேறு கெட்டிப்படுத்தும் பொருளுடன் சேர்க்கப்பட்டு கட்டியாக்கப்பட்டு அதைக் கொண்டு உயர்வேக வெட்டு உலோகம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் வேலைக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உலோகப் பொருள் விடியாமெட்டல், கார்போலாய், போரான் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்பட்ட வெட்டுக் கருவிகள் முன்னர் இருந்தவற்றை விட 3 முதல் 5 மடங்குவேகத்தில் வெட்டுபவை. இது விலை உயர்ந்தது என்றாலும் பல அமைப்புகள், செலவுக்கு ஏற்ப இது உழைக்கிறது என்று கருதுகின்றனர்

tungsten lamp : (மின்) டங்ஸ்டன் பல்பு : டங்ஸ்டன் உலோகத்தால் ஆன மெல்லிய கம்பியை இழையாகக் கொண்ட மின்சார பல்பு

tungten steel : (உலோ) டங்ஸ்டன் உருக்கு : வெட்டு வேலைக் கருவிகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோக உருக்கு

tuning : (மின்.) இயைவிப்பு : ரேடியோ அலைகளைப் பெறும் சர்க்கியூட்டின் மின் பண்புகளை மாற்றி, நாம் விரும்புகிற குறிப்பிட்ட சிக்னல்கள் நன்கு தெளிவாகவும், வலுவாகவும் பெறும் படி செய்தல்.

tuning fork : (மின்) இசைக் கவடு: ஈரலகு வில்லமைவுடைய நிலையான சுர அதிர்வு அமைவு வாய்ந்த இசை ஒலிக் கருவி

tuning fork : (மின்) இசைக் கவடு:படம்

tunel engineer: (பொறி) சுரங்கப் பொறியர் : போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மலைகள் ஊடாகவும் ஆறுகளுக்கு அடியிலும் சுரங்கப் பாதை அமைக்க அளவீடுகள் டிசைன்கள் ஆகியவற்றை மேற்பார்வையிடுபவர்

turbidity : கலங்கல்: தெளிவான நீருடன் ஒப்பிடுகையில் வண்டல் போன்றவற்றால் நீர் கலங்கி இருக்கும் அளவு

turbine : டர்பைன் ; ஒரு வகை நீராவி என்ஜின். இதில் இயக்குவிக்கும் உறுப்புகள் அனைத்தும் சுழல்கின்றன

turbojet : (விண்) பீற்றுவளி விசைப்பொறி உருளை: பீற்று துளியால் இயக்கப்படும் விசையாழி. மின்னோடியின் பீற்று வாயுக்க்ள் மூலம் விசையாழி இயக்கப்படுகிறது

turbo - propeller engine : (வானூ.) டர்போ கழலி என்ஜின் : வாயு ட்ர்பைன் மாதிரியிலான விமான என்ஜின், இதில் டர்பைன் மாதிரியிலான விமான என்ஜின். இதில் டர்பைன் விசையானது கம்