பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/656

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

654

V


V's (எந்:பட்) 'V' வழிகள்: மேசை அல்லது பொருட்கள் நிறைந்த கலங்கள் நகர்ந்து செல்வதற்கென சற்று உயரமான அல்லது குழிவான வகையில் அமைந்த 'V' வடிவப் பாதைகள்

Vaccine : (நோயி..) அம்மைப் பால் : 1. பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர். இந்த காப்புச் சீநீர் பசுவிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதருக்கு வரும் அம்மை நோய்க்கு எதிராகப் பாதுகாப்பதற்கு அம்மை குத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது

2. ஒரு நோயின் இறந்து போன அல்லது வலுவிழந்து போன பாக்டீரியாவில் அடங்கியுள்ள திரவம். இந்தத் திரவம், அதே நோய்க்கு எதிரான பொருட்களை உடலில் உற்பத்தி செய்வதற்காக ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது

Vaccum : (இயற்.) வெற்றிடம்: காற்று அல்லது வேறு ஏதேனும் ஒன்று வெளியேற்றப்பட்ட கொள்கலம் (நீராவி, வெப்பம்)

Vaccum brake : (தானி.) வெற்றிடமுறை தடை: கனரகப் பயணி வாகனங்களுக்கு மிகவும் உகந்த ஏற்பாடு. தடை இயக்கு முறையானது உள்வாங்கு பன்முனைக்குழாய் அல்லது கார்ப்பரேட்டரிலிருந்து திராட்டிலுக்கு சற்று மேலே வெற்றிடத்தை பெற்றுக் கொண்டு இயங்குகிறது

Vaccum control : (தானி.) வெற்றிடக் கட்டுப்படுத்தி : பன்முனைக்குழாய் வெற்றிடத்தினால் கட்டுப்படுத்தப்படுகிற தடை (பிரேக்), கவ்வான் (கிளட்ச்)போன்று மோட்டார் வாகனத்தின் எந்த ஓர் உறுப்புக்கும் பொருந்தும்

Vaccum cleaner : வெற்றிடமுறை துப்புறவி : கம்பள விரிப்பு, போன்றவற்றிலிருந்து குப்பை, தூசு ஆகியவற்றை வெற்றிடமுறை மூலம் உறிஞ்சும் மோட்டாரால் இயங்கும் மின்விசிறிக் கருவி

Vaccum forming : (குழை.) வெற்றிடமுறை உருவாக்கம் : சிட்டை / பதாகை (ஷீட்) உருவாக்கம் (அ) வெப்பமுறை உருவாக்கம் என்றும் பெயர் உண்டு. முக்கியமான ஒரு வெப்பமுறையில் குழைமம் (பிளாஸ்டிக்), குழைகிற அளவுக்கு சூடேற்றப்பட்டு பிறகு வெற்றிடமுறை மூலம் ஒரு அச்சில் வந்து படியும்படி செய்யப்படுகிறது. இதில் பல மாறுபட்ட முறைகள் உள்ளன. காற்றைக் கீழ்நோக்கிச் செலுத்தி குழைமம் சிட்டைகளாக (ஷீட்டுகளாக) உருவாகும்படி செய்யலாம். அல்லது காற்றை மேல் நோக்கிச் செலுத்தியும் சிட்டைகளை (ஷீட்களை) உருவாக்கலாம். இந்த முறையைப் படிமான முறை என்றும் கூறலாம். விளம்பர அடையாளங்கள், விமான உறை போன்றவற்றைச் செய்யப் படிமான முறை பயன்படுத்தப்படுகிறது

vaccum fuel supply : (தானி.) வெற்றிடமுறை எரிபொருள் அளிப்பு: பிரதான எரிபொருள் தொட்டியிலிருந்து உயர் மட்டத்தில் உள்ள என்ஜினுக்கு வெற்றிட முறை மூலம் தான் பெட்ரோல் கிடைக்கிறது. வெற்றிடத் தொட்டி இதற்கு உதவுகிறது