பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/687

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
685
Z

Z-axis : (மின்.) இசட்-அச்சு : ஒரு படிகத்தின் விழிக்காட்சி அச்சு

zebrano : (மர.வே.) ஜீப்ரானோ : ஆஃப்ரிக்காவின் மேற்குக் கரையைச் சேர்ந்த மிகப்பெரிய மரம். மரம் மிகக் கெட்டியானது. எடை மிக்கது. வலிமை கொண்டது. இதன் சற்று மங்கலான பின்னணி நிறம், கரும் பழுப்பான இணை கோடுகள் காரணமாக இது பார்வைக்கு மிக எடுப்பானது. மிக நளினமான மரவேலைப் பொருட்கள், சுவர் மறைப்புப் பலகைகள் ஆகியவற்றுக்கு மிக அரிய மரமாகக் கருதப்படுகிறது

zee bar : (பொறி.) ஜீ பார் : கட்டுமான உருக்குத் தண்டு. அதன் குறுக்கு வெட்டு ஆங்கில 'Z' வடிவில் அமைந்து மேற்புறத்தையும் கீழ்ப்புறத்தையும் இணைப்பது. பெரும்பாலும் கப்பல் கட்டுமானத்துக்கும், இதர கட்டுமானங்களுக்கும் பயன்படுவது

zeolite : (கம்.) ஜியோலைட் : ஒரு வகைக் கனிமம். இது ஒரு வேதியியியல் கூட்டுப் பொருள். இது கரைசலில் இதனுடன் கலந்திருக்கும் பிற வேதியியற் பொருள்களின் கட்டமைப்பைப் பொறுத்துத் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக்கூடியது

zero : பூச்சியம் : எண்களில் சூன்யத்தைக் குறிப்பது. மதிப்பில் மிகத் தாழ்ந்தது

zero ceiling : (வானூ.) பூச்சிய வரம்பு : 30மீட்டருக்குக் கீழான மேகக்கூட்டம். விமானம் பறப்பதற்குத் தகுதியற்ற வானிலை

zero gravity : (விண்.) ஈர்ப்பின்மை : ஈர்ப்பு விளைவு முற்றிலும் இல்லாத நிலை

zerone : துருத்தடை : குளிர் உறைவுத் துருத்தடை அமைவு

zig zag rule; மடியும் அளவு கோல் : அளவு கோலானது மடிக்கும் வசதி கொண்டது. மடித்து விரிக்கும் போது உள்ள நிலையைக் குறிப்பது. மொத்தம் 6 முதல் 2.4மீ. நீளம் இருக்கும். எனினும் இது தனித்தனியே 5.செ.மீ. பகுதிகள் கொண்டது. இவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை

zinc : (உலோ.) துத்தநாகம் : நிலம் பாய்ந்த வெண்மை நிற உலோகம். கால்வனைசிங் செய்வதற்கும் கலோகங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுவது

zinc chloride : (வேதி.) துத்த குளோரைடு : வெள்ளை நிறமுள்ளது. நீர்த்துப் போகிற உப்பு. ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் துத்தத்தை, அல்லது துத்த ஆக்சைடை சேர்ப்பதன் மூலம் அல்லது துத்தத்தை குளோரினில் எரிப்பதன் மூலம் பெறப்படுவது. பற்ற வைப்புக் காரியங்களுக்கு எளிதில் உலோகத்தை உருக்கத்துணைப் பொருளாகப் பயன்படுவது

zinc engraving or . etching : (அச்சு.) துத்தச் செதுக்கு : துத்த நாகத்தினால் ஆன அச்சுத் தகடு. அச்சிடப்பட வேண்டிய பகுதியை மட்டும் விட்டு விட்டு மீதிப்பகுதியை மட்டும் செதுக்கி அகற்றிவிடுதல்