பக்கம்:அறிவியல் அகராதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cor

102

cos


corpus allatum - மூளை பின் சுரப்பி: பூச்சித் தலையில் மூளைக்குப் பின்னுள்ள நாளமிலாச் சுரப்பி. இது சுரக்கும் வளர்துாண்டி கூட்டுப் புழு தோலுரிக்க உதவுகிறது. (உயி)

corpus callosum - குறுக்கிணைப்பி: பாலூட்டிகளில் குறுக்கு நரம்புகளின் வழிகள். இவை இரு பெருமூளை அரைத்திரள்களையும் இணைப்பவை. (உயி)

corpuscular theory - துகள் கொள்கை: துகள்களாலானது. ஒளி என்னுங் கொள்கை. அலைகளாலானது. ஒளி என்பதும் மற்றொரு கொள்கை. முன்னது. நியூட்டன் வழி வந்தது. பின்னது தாமஸ் யெங் வழி உருவானது. (இய)

corpus luteum - மஞ்சள் திரள்: முட்டை வெளியானதும் பாலூட்டியின் சூல்பையில் கிராபியன் நுண்ணறைக் குழியில் தோன்றும் மஞ்சள் நிறப் பொருள். புராஜெஸ்ட்ரான் என்னும் தூண்டியைச் சுரப்பது. (உயி)

corrosion - உலோக அரிமானம்: உலோகம் அல்லது உலோகக் கலவை சுற்றுப்புறத்துடன் வேதிவினையுற்று அழிதல். உலோக மேற்பரப்பில் நிகழ்வது.

கட்டுப்படுத்தல்: 1. தார்பூசுதல் 2. மின்னாற் படிய வைத்தல் 3. எனாமல் பூசுதல் 4. நாகமுலாம் பூசுதல் 5. வண்ணம்பூசுதல். ஒ. erosion. (வேதி)

cortex - புற அடுக்கு: 1. தாவரத்திசு, 2. சிறுநீரகம், பெருமூளை ஆகியவற்றின் புறப்பகுதி. (உயி)

corticosteroid - கார்டிகோஸ்டெராய்டு: அடரினலின் சுரப்பியின் புறணிச் சுரப்பிகளில் ஒன்று. (உயி)

cortisol - கார்ட்டிசால்: அய்டிரோ கார்ட்டிகோன். அட்ரினல் சுரப்பு. கொழுப்புப் படிவதை ஒழுங்கு படுத்துவது. (உயிர்)

cortisone - கார்டிசான்: அய்டிரோ கார்ட்டிகான், அட்ரினல் கரப்பு. கொழுப்புப் படிவதை ஒழுங்கு படுத்துவது. (உயி)

corrundum - குருந்தக்கல்: இயற்கையில் கிடைக்கும் கடினமானதும் சிலிகான் இல்லாதததுமான தேய்ப்புப் பொருள். (வேதி)

corymb - தட்டைக்கொத்து: நுனிவளர் பூக்கொத்தின் ஒரு வகை நுண்பூக்காம்புகள் வேறுபட்ட நீளத்தில் இருப்பதால், எல்லாப்பூக்களும் ஒரே மட்டத்தில் இருக்கும். எ-டு. மயில் கொன்றை. (உயி)

cosmic rays - விண்கதிர்கள்: விண்வெளியிலிருந்து தோன்றும் கதிர்கள். குறிப்பிடத்தக்க மாற்றங்களை உடலில் உண்டாக்குபவை. இவற்றைச் செயற்கைக் கோள்கள் நன்கு ஆராய்ந்தள்ளன. இவை வானவெளிப்பயணத்திற்குத் தடையாக இருப்பவை. முழுமை