பக்கம்:அறிவியல் அகராதி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dat

113

dea


தகவல் திரட்டு, கணிப்பொறித் தொகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது. இதில் மேற்கோள் குறிப்புகள் அடங்கி இருக்கும். எ-டு. தலைப்புச் சொற்கள், முதன்மைச் சொற்கள், இலக்கியத் தலைப்புகள் முதலியவை. (இய)

data bus - தகவல் போக்குவாய்: கணிப்பொறியில் நினைவகத்திற்கும் நுண்செயல் முறையாக்கிக்கும் இடையே அமைந்த மின்வழி. இது ஒரு தொகுதி கம்பிகளாலானது. இதன் வழியே ஒரு சமயம் ஒரு பைட் வீதம் இரு நிலைக்குறிபாடுகள் செல்லும். இக்குறிபாடுகள் அமைந்த செய்தி புறக்கருவியத்திற்குச் செல்லும். அங்கிருந்து மீண்டும் உள்ளே வரும். பா. address, bus. (இய)

data storage - தகவல் சேமிப்பு: கணிப்பொறியில் செய்திகளைத் தேக்கி வைத்தல்.

dating techniques - கால கணிப்பு நுணுக்கங்கள்: தொல்லுயிர்ப் படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இவை இருவகைப்படும். 1.சார்புக் காலமறி நுணுக்கம் (ரிலேட்டிவ் டேட்டிங்) மற்ற மாதிரிகளோடு ஒப்பிட்டு ஒரு மாதிரியின் வயதை உறுதி செய்வது. 2.சார்பிலாக் காலமறி நுணுக்கம் (அப்சல்யூட் டேட்டிங்) நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு வயதை உறுதி செய்தல். பா.carbon dating, radioactive dating.(இய)

daughter - சேய்: 1.கதிரியக்கதால் ஏற்படும் கருவைடு. 2. பிரிகையால் உண்டாகும் அயனி 3. சேயனு. (இய)

day - நாள்: புவி தன் அச்சில் ஒரு சுற்றுசுற்ற ஆகும் காலம். 24 மணி. (பு.அறி)

day neutral plant - நடுநிலை பொழுதுத் தாவரம்: பூப்பதற்குக் குறிப்பிட்ட ஒளிக் காலத்தை விரும்பாத் தாவரம். பா. photoperiodism. (உயி)

day vision - பகற்பார்வை: ஒளிர் வான பகல் ஒளிப்பார்வை. (உயி)

DDT - டீடீடி: C14H9Cl5 இரு குளோரோ இருபினைல் முக் குளோரோதீன் இ இ மு. படிகமற்ற வெள்ளைத்தூள். நீரில் கரையாதது. நறுமண அய்டிரோகார்பன்களில் கரைவது. 1874இல் ஒத்தனார் செயில்டர் என்பவரால் தொகுக்கப்பட்டாலும் 1930இல் அதன் பூச்சிக் கொல்லி பண்புகள் பால் முல்லர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரைப்பை நஞ்சு. நெடிய நஞ்சு விளைவு கொண்டது. (வேதி)

dead beat - வெற்று விம்மல்: (இய).

deadload - வெற்று எடை:பொருள்களை நிறுப்பதில் பிழையை நீக்கப்பயன்படுவது. கணக்கில் கொள்ளப்படாதது. (இய)