பக்கம்:அறிவியல் அகராதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

den

119

der


dendron, dendrite - கிளையன்: ஒரு நரம்பணுவிலிருந்து கிளைக்கும் இழை. கண்ணறை உடல் நோக்கித் துடிப்புகளை எடுத்துச் செல்லுதல். செய்திப் போக்குவரத்தில் இன்றியமையாப் பகுதி. (உயி)

denervation - நரம்பு சிதைதல்: உடலின் ஒரு பகுதியிலுள்ள நரம்பு சிதைந்து, அந்நரம்பிலுள்ள உறுப்பு நலிதல். (உயி)

denitrification - நைட்ரேட்டு நீங்குதல்: சில குச்சியங்களின் உயிர்ப்பினால் மண்ணிலிருந்து நைட்ரேட்டு உப்புகள் நீங்குதல். (உயி)

density - அடர்த்தி: ஒரு பொருளின் அலகு பருமனின் பொருண்மை. அதாவது, ஒரு கன செண்டி மீட்டர் பொருளின் எடை 1 கிராம். ஒரு கன சென்டி மீட்டர் பாதரசத்தின் எடை 1.4 கிராம். இஃது அலகில் குறிக்கப்படுவது. அடர்த்தி அதிகமாக அதிகமாகப் பொருள்களின் எடையும் அல்லது கனமும் அதிகமாகும். குறையக் குறைய கனம் குறையும். ஒ. relative density. (இய)

dental formula - பல்லமைவு வாய்பாடு: பா. dentition. (உயி)

denticulate - பல் விளிம்பு: பல் போன்று இலை விளிம்பு இருத்தல்: செம்பருத்தி. (உயி) பா.

dentition - பல்லமைவு: தாடையில் பற்கள் அமைந்திருக்கும் முறை. இம்முறையைக் குறிக்கும் வாய்பாடு பல்லமைவு வாய்பாடு. (உயி)

dentrifice - பல்துலக்கி: பல்லைத் துலக்கப் பயன்படும் பொருள் பற்பொடி பற்பசை. (உயி)

deodorants - நாற்ற நீக்கிகள்: நாற்றத்தைப் போக்கும் பொருள்கள். எ-டு. பினாயில், பொட்டாசியம் பர்மாங்கனேட்.(வேதி)

depolarization - முனைப்படுதல் நீக்கம்: 1. தசையணு, நரம்பணு ஆகியவற்றின் படலத்திற் கிடையே நிலவும் அழுத்த வேறுபாட்டைக் குறைத்தல். அதாவது, நிலைப்பு அழுத்தத்தைக் குறைத்தல். 2. முதல் மின்கலத்தில் முனைச் செயலைப் போக்குதல். முனைப்படுதல் நீக்கி. (போலரைசர்) மாங்கனீஸ் ஈராக்சைடு. (இய)

depolariser - முனைப்படுதல் நீக்கி: பா. depolarization. (இய)

deposition - படிதல்: புவி மேற்பரப்பில் பொருள்கள் இறுகல். (பு.அறி)

depression - தாழ்வழுத்தம்: காற்று வெளி அழுத்தம் குறைந்து மழையும் புயலும் உண்டாதல். (இய)

derived unit - வழியலகு: அடிப்படை அலகுகளை ஒட்டி வரையறை செய்யப்படும் அலகு. எ-டு. நியூட்டன் என்பது கிலோ கிராம் மீட்டர் வினாடி-2 என வரையறுக்கப்படுகிறது. பா. fundamental units. (இய)

dermal bone - தோல் எலும்பு: