பக்கம்:அறிவியல் அகராதி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dwa

130

dys


பருவம் அல்லது காளைப் பருவத்தில் பிட்யூட்டரி குறைவாகச் சுரப்பதால் உண்டாவது. ஒ. gigantism. (உயி)

dwarfstar - குள்ள விண்மீன்: சிறிய விண்மீன். (வானி)

dyad - இரு பிணைப்பணு: படிமூலி அல்லது தனிமம். (வேதி)

dye - சாயம்: தோல், துணி முதலியவற்றை நிறமாக்கும் பொருள். பெரும்பாலான சாயங்கள் தொகுப்புக் கரிமச் சாயங்களே. இவற்றில் மாவே என்பது முதல் சாயம். இது 1856இல் அனிலைனிலிருந்து பெர்கின் என்பவரால் தொகுக்கப்பெற்றது.காடிச் சாயம், காரச் சாயம், தோய் சாயம், நேரடிச் சாயம் எனப் பலவகைப்படும். (வேதி)

dynamics - இயக்கவியல்: விசைகளின் வினையால் எவ்வாறு பொருள்கள் அசைகின்றன என்பதைப் பற்றி ஆராயும் துறை. இயக்கத்தை விரித்துக் கூறுவது. இயக்கத்திற்கும் விசைக்குமிடையே உள்ள தொடர்பையும் இது ஆராய்வது. இயற்பியலின் ஒரு பிரிவு.

dynamite - டைனமைட்: மீவெடியம். ஆற்றல் வாய்ந்த வெடி பொருள். நைட்ரோ கிளிசரினிலிருந்து செய்யப்படுகிறது. இதிலுள்ள ஏனைய பகுதிகள் மரத்தூள், அம்மோனியம் நைட்ரேட். இரண்டாம் உலகப் போரில் அதிகம் பயன்பட்டது. இதனைக் கண்டறிந்தவர் ஆல்பிரட் நோபல்.

dynamo - மின்னியக்கி: மின்னியற்றி மிதிவண்டியிலும் உந்து வண்டியிலும் பயன்படுவது.

dynamometer - ஆற்றல்மானி: ஆற்றல், விசை, திறன் ஆகியவற்றை அளக்குங் கருவி. (இய)

dynatron - நான்வாய்ப் பிறப்பி: நான்கு மின்வாய் வெப்பஅயனித் திறப்பி. தொடர்ந்த அலைவை உண்டாக்கப் பயன்படுவது. (இய)

dynatron oscillator - நான்வாய் அலைவி: நான்கு மின்வாயைப் பயன்படுத்தும் அலை இயற்றி. இதில் நேர்மின்வாய் அழுத்தம் குறையும் பொழுது அதன் மின்னோட்டம் அதிகமாகும். இவ்வாறு அதிகமாகும் அளவுக்கு அதைப் பயன்படுத்த வேண்டும். (இய)

dyne - டைன்: அலகுச் சொல்: விசையின் சார்பிலா அலகு. ஒரு வினாடியில் ஒரு கிராம் நிறையுள்ள பொருள்மீது செயற்படும் விசை ஒரு வினாடிக்கு ஒரு சென்டி மீட்டர் நேர்விரைவை உண்டாக்கும். 1 டைன் = 10-5 நியூட்டன் (இய)

dynode - இயக்குவாய்: இது ஒரு மின்வாய். இதன் முதன்மையான வேலை மின்னணுக்களை இரண்டாம் நிலையாக உமிழ்வதாகும்.(இய)

dysentery - வயிற்றுக் கடுப்பு: குடல் குறைபாடு. அடிக்கடி நீர்மமாக