பக்கம்:அறிவியல் அகராதி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fal

158

Far


fallout - வீழ்பொருள்: வீழி அணு வெடிப்புக் கூளத்தைக் கொண்ட முகில்களிலிருந்து விழும் கதிரியக்கத்துகள். (இய)

false fruit - பொய்க்கனி: இதனைப் போலிக்கனி என்றும் கூறலாம். முந்திரிப்பழத்தில் சதைப்பகுதி பொய்க்கனி. உண்மைக்கனி முந்திரிக்கொட்டை. (உயி)

false septum - பொய்த்தடுப்பு:' முதலில் ஒற்றைச் சூல்பையின் நடுவில் தோன்றிப் பின் அதை ஈரறையாக்கும் தடுப்புச் சுவர். (உயி)

family - குடும்பம்: 1. ஓர் அடிப்படைக்குழு. நெருங்கிய மரபுவழியுள்ள பெற்றோரையும் அவர் தம் குழந்தைகளையுங் கொண்டது. 2. உயிரிச் சமூகத்தின் வகையலகு பேரினத்திற்கும் வரிசைக்கும் நடுவிலுள்ளது. (உயி)

fangs - நச்சுப்பற்கள்: நச்சுப் பாம்பின் மேல் தாடையிலுள்ள வளைந்த இரு கோரைப்பற்கள். கடிக்கும்போது, நச்சைச் செலுத்த ஊசிபோல் பயன்படுவது. (உயி)

farad - பாரஃட்டு: மின்னேற்புத் திறனலகு, C = Q/v. C- மின் னேற்புத்திறன். Q- மின்னேற்ற அளவு, V- ஒல்ட் ஒரு மின்னேற்பியில், 1 ஒல்ட் மின்னழுத்தம் நாம் அளக்கும்போது, அது ஒரு கூலும் மின்னோட்டம் பெறுமாயின், அந்த மின்னேற்பியின் மின்னேற்புத்திறன் ஒரு ஃபாரட் ஆகும்.

faraday - பாரடே : f. மின்னேற்ற அலகு. ஒரு மோல் மின்னணுக்கள் கொள்ளும் மின்னேற்றம் மதிப்பு 9.648670 x 104 கூலும் மோல். வேறு பெயர் பாரடே மாறிலி. (இய)

Faraday effect - பாரடே விளைவு: காந்தப் புலத்திற்குட்பட்ட ஒரே பண்புள்ள ஊடகத்தின் வழியே, மின்காந்தக் கதிர்வீச்சு செல்லும் போது, அதன் முனைப்படு தளத்தின் சுழற்சியே பாரடே விளைவாகும். இது ஊடகத்தின் கதிர்வீச்சு வழியின் நீளத்திற்கும் காந்த ஒட்ட அடர்த்திக்கும் நேர் வீதத்தில் இருக்கும். (இய)

Faraday's laws - பாராடே விதிகள்: இவை இருவகைப்படும். முதல் வகை மின்னாற்பகுப்பு விதிகள். இரண்டாம் வகை மின்காந்தத் தூண்டல் விதிகள். (இய)

முதல்வகை 1) ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டம் செல்லும்போது கரைசலிலிருந்து வெளிப்படும் உலோகத் தனிமத்தின் நிறை, மின்னோட்டம் செலுத்தப்படும் நேரத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும். 2. ஒரு மின்பகுளி வழியாக மின்னோட்டஞ் செல்லும்போது, வெளித்தள்ளப்படும் உலோகத்தின் நிறை, அதில் பாயும் மின்னோட்ட வலிமைக்கு நேர் வீதத்தில் இருக்கும். 3. வெவ்வேறு மின்பகுளிகள் வழியாக ஒரே அளவு மின்னோட்டம்