பக்கம்:அறிவியல் அகராதி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

for

168

fos


வாளிகளைக் கண்டறியக் காவல் துறைக்கு உதவுந் துறை. தமிழ்நாடு மாநிலக் குற்ற அறிவியல் ஆய்வகம் சென்னையில் காமராசர் சாலையில் உள்ளது. (உயி)

force ratio - விசைவிதம்: எந்திரலாபம், எந்திரத்தின் வெளிப் பாட்டு விசைக்கும் (பளு) உட்பாட்டு விசைக்கும் (முயற்சி) உள்ள வீதம். (இய)

forests - காடுகள்: சாகுபடி செய்யப்படாததும் மனிதத் தலையீடு அதிகமில்லாதவையுமே காடுகள், வெப்பம், மழையளவு, ஈரப்பதம், தேவையான அளவு இடம் ஆகியவை இவற்றை உண்டாக்குங் காரணிகள். இவை வெப்பமண்டல மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், ஊசியிலைக் காடுகள், மிதவெப்பமண்டலக் காடுகள் என நான்கு வகைப்படும். இயற்கையில் சமநிலையை நிலைநிறுத்துபவை. காடுகள் அழிந்து வருவதால், தற்பொழுது மர வளர்ப்புத் திட்டம் அரசால் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது. அதன் பெரும்பகுதியாகச் சமூக வளர்ப்புக்காடுகள் விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இக்காடுகளில் அதிகம் வளர்க்கப்படுவது கற்பூரத் தைல மரங்கள். (உயி)

form - வடிவம்: மாறுபடு வகைக்குக்கீழுள்ள வரிசை. கீழ்நிலையிலுள்ள டேக்சான். (உயி)

formalin - பார்மலின்: 40% பார்மல்டிகைடு 8% மீத்தைல் ஆல்ககால், 52% நீர்மம் சேர்ந்த கலவை. ஒடுக்கி, தொற்றுநீக்கி, பூஞ்சைக்கொல்லி, பாதுகாப்புப் பொருள்.(உயி)

format - வடிவமைப்பு: அமைப்பு வரை. காட்சி வெளிப்பாட்டகத்தில் (காட்சித் திரையில்) தகவல்களைத் திட்டப்படுத்தல். அச்சுச்செய்தி, சேமிப்பு ஊடகம் ஆகியவை இதில் அடங்கும். ஒ layout (இய)

formula - 1.வாய்பாடு ஒரு வேதிச் சேர்மத்தின் இயைபைத் தெரிவிக்கும் முறை. அதிலுள்ள அணு எண்ணிக்கையைக் காட்ட மேலே குறி எண்களையும் குறிகளையும் பயன்படுத்தல். எ-டு. சோடியம் குளோரைடு (NaCl) சோடியம் சல்பேட்டு (Na2SO4) 2. கலப்பு இயைபு: ஒரு மருந்திலுள்ள இயைபு 3. உறுப்புகளின் அளவு.

fornix - வளைமுடிச்சு: பாலூட்டிகளின் மூளையிலுள்ள குறுக்கு இணைப்பிக்குக் கீழுள்ள நீள்கற்றை. (உயி)

forward bias - முற்சார்பு: ஓர் இயற்பியல் பண்பு.

fossa - குழிவு: எலும்புக்குழி. ஒ.fovea.

fossils - தொல்படிவங்கள்: புதை படிவங்கள். புவிஒட்டின் படிவப்பாறைகளில் இவை பாதுகாக்கப் பட்டிருப்பவை. (உயி)

fossil fuel - தொல்படிவ எரி பொருள்: நிலக்கரி, எண்ணெய். (வேதி)