பக்கம்:அறிவியல் அகராதி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

het

198

het


தொடக்க இறுதிநிலைகள் மாறாமல் இருப்பின், ஒருபடி அல்லது பலபடிகளில் வினை நடைபெற்றாலும் எவ்வேதிவினைக்கும் உள்ளீட்டு வெப்பம் (என்தால்பி) நிலையானது. உயிரிய வேதியலார் ஹென்றி ஹெஸ் (1802-1850) 1840இல் முன்மொழிந்தது. (வேதி)

heterodont-வேற்றகப் பல்லுடைய : வேறு வகையான பற்களைக் கொண்ட எ-டு, வெட்டுப்பல், கோரைப்பல், கடவாய்முன்பல், கடவாய்ப் பின்பல். (உயி)

heterogametic sex - வேற்றகப் பால்: வேறுபட்ட நிறப்புரிகளைக் கொண்ட பால் (x,y). (உயி)

heterogenous - வேற்றகநிலை: பலபடித்தான நிலை. வேறுபட்ட வீதங்களில் வேறுபட்ட பண்புகளைக் கொண்ட நிலை. (வேதி)

heterogenous action - வேற்றக வினை: வேறுபட்ட நிலைகளிலுள்ள பொருள்களுக்கிடையே நடைபெறும் வினை. எ-டு. நீர்மத்திற்கும் வளிக்குமிடையே நடைபெறும் வினை. (வேதி)

heterokaryosis - வேற்றகக்கரு நிலை: ஒரு தனி உயிரணுவில் வேறுபட்ட மரபு முத்திரைகள் கொண்ட கருக்கள் அமைந்திருத்தல் (உயி)

heterolytic fission - வேற்றகப் பிளவு: வேதிப்பிணைப்பு நீங்குவதால், ஒன்றுக்கொன்று எதிர் மின்னேற்றமுடைய அயனிகள் உண்டாதல். (வேதி)

heterophylly - வேற்றக இலையமைவு: ஒரே தாவரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பொது இலைவடிவம் இருத்தல்.

hetero sexuality - வேற்றகப் பால்கவர்ச்சி: ஆண் பெண்ணிற் கிடையே உள்ள கவர்ச்சி. (உயி)

heterosporous - வேற்றகச் சிதல் நிலை: கலவி இல்லாமல் உண்டாகிய வேறுவகைச் சிதல்களைக் கொண்டிருத்தல். (உயி)

heterostyly- வேற்றகச் சூல்தண்டு: இஃது ஒர் ஈருருவத் தோற்றம். இதில் ஒரே சிறப்பினத்தின் சூல்தண்டுகள் வேறுபட்ட நீளங் கொண்டிருக்கும். ஒரு நிலையில் நீண்ட சூல்தண்டும் குறுகிய மகரந்தத் தாள்களும் மற்றொரு நிலையில் குறுகிய சூல்தண்டும் நீண்ட மகரந்தத் தாள்களும் இருக்கும். (உயி)

heterothermic - வேற்றக வெப்பநிலை விலங்குகள் : நிலைத்த உடல் வெப்பநிலை இல்லா விலங்குகள். தங்கள் செயல் ஆக்கக் காலத்தில் அகவெப்பநிலை ஒழுங்குபாடுகளைக் காட்டுதல். பா. cold blooded animals. (உயி)

heterotrophy - வேற்றக முனைப்பு உயிரிகள்: தம் உணவைத் தாமே ஈட்ட இயலாத உயிர்கள். காரணம், பச்சையம் இல்லாமை, ஒட்டுண்ணிகள், காளான். (உயி)

heterozygote - வேற்றகக் கருவணு: இரு கருமூலவணுக்களால்