பக்கம்:அறிவியல் அகராதி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyd

207

hyd


நீரைக்கொடுக்கும் 1766இல் கேவண்டிஷ் என்னும் வேதி நூலார் பகுத்தறிந்தது. (வேதி)

hydrogenation - அய்டிரஜன் ஏற்றம்: நீர்வளி ஏற்றம். ஒரு சேர்மம் அய்டிரஜனோடு சேர்ந்து ஆற்றும் வினையாற்றல். ஹேபர் முறையில் நைட்ரஜனோடு அய்டிரஜனை சேர்க்க அம்மோனியா உண்டாதல். தாவர எண்ணெயோடு நீர் வளியைச் சேர்த்து அரைக் கெட்டி நிலையுள்ள வனஸ்பதி உண்டாக்கப்படுகிறது. (வேதி)

hydrogen bomb-நீர்வளிக்குண்டு: அணுப்பிணைவு அடிப்படையில் அமைந்தது. இதில் நீர்வளி உட்கருக்கள் ஈலிய உட்கருக்களாக மாற்றப்படுவதால், அளப்பரிய ஆற்றல் உண்டாகிறது. 1952 நவம்பர் திங்களில் அமெரிக்கா இக்குண்டை வெடித்தது. அணுப்பிணைவிற்கு இயற்கை உலையாக இருப்பது கதிரவன் (இய)

hydrogen ion concentration - அய்டிரஜன் அயனிச்செறிவு: ஒரு லிட்டர் கரைசலில் அடங்கியுள்ள அய்டிரஜன் அயனிகளின் கிராம் எண்ணிக்கை, ஒரு கரைசலின் காடித்தன்மையை அளக்கப் பயன்படுவது பி.எச். மதிப்பாகும். நீரின் பிஎச் 7. (வேதி)

hydrogen peroxide - அய்டிரஜன் பெராக்சைடு: நிறமற்ற நீர்மம், பேரியம் பெராக்சைடுடன் நீர்த்த கந்தகக்காடியைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். ஆல்ககால், ஈதர், நீர் ஆகியவற்றில் இது கரையும். உயிர்வளி ஏற்றி அல்லது குறைப்பி, புரைத்தடுப்பான், புழுக்கொல்லி, வெளுப்பி (வேதி)

hydrology - நீரியல்: நீரை ஆராயுந்துறை. குறிப்பாக, அதன் தோற்றம் பண்புகள் ஆகியவற்றை ஆராய்வது. பண்பறிபகுப்பில் பயன்படுவது. (இய)

hydrolysis - நீராற்பகுப்பு: நீரைச் சேர்த்து அரிய பொருள்களை எளிய பொருள்களாகப் பிரித்தல். (இய)

hydrometer - நீர்மானி: நீர்மங்களின் ஒப்படர்த்தி காணப்பயன்படுங் கருவி. (இய)

hydrophillic- நீர்நாட்டம்: நீரை ஈர்க்கும் தன்மை. (வேதி)

hydrophily - நீர்க் கவர்ச்சி: நீரினால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை, எ.டு. நீர்ப்பாசி. (உயி)

hydrophobic - நீரச்சம்: 1. நீரைக் கண்டு அஞ்சுதல். 2. தொண்டைச் சுருக்கத்தினால் நீர் விழுங்க இயலாமை. வெறிநாய்க்கடி அறிகுறி. (உயி)

hydrophone - நீரொலிமானி: நீருக்குக்கீழ் ஒலியைப் பதிவு செய்யுங் கருவி. (உயி)

hydroponics - நீர்வளர்ப்பியல்: மண்ணில்லாமல் வேதிக்கரைசலில் தாவரங்களை வளர்த்தல். (உயி)