பக்கம்:அறிவியல் அகராதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

all

20

alu


உறுப்பை ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் ஒட்டுதல். இதில் ஒரே மாற்றிப் பொருத்தலுக்குரிய எதிர்ப்புத் துண்டிகள் இரா. ஒ. autograft. (உயி)

alopathy - அயற்பண்டுவம்: இச் சொல் ஆங்கிலத்தில் அனிமன் (1755-1843) என்பவரால் உருவாக்கப் பெற்றது. இது ஒருநோய் நீக்கு முறை குணமாக்கு நிலைக்கு எதிரான நிலைமை இதில் உருவாக்கப்படுகிறது. இதனைச் செய்பவர் அயற்பண்டுவர் (அலொபதிஸ்ட்) எனப்படுவர். ஒ. homeopathy. (மரு)

allotropes அயலுருக்கள்: கெட்டிப் பொருள்களின் வேறுபட்ட இயல்பு வடிவங்கள் எ-டு. கரியின் வேற்றுருக்கள்: வைரம், கிராபைட்டு. (வேதி)

allotropy - அயல்வேற்றுருமை: இயற்பண்புகளில் மாறுபட்டுப் பல வடிவங்களில் இருக்கும் ஒரு தனிமம் தன் வேதிப்பண்புகளிலும் மூல அமைப்பிலும் மாறாமல் இருக்கும் இயல்பு. புறவேற்றுமை என்றும் கூறலாம். எ-டு. சாய்சதுரக் கந்தகம், ஊசிவடிவக் கந்தகம், களிக்கத்தகம். (வேதி)

alpha decay - ஆல்பா சிதைவு: கதிரியக்கச் சிதைவு. அணுக்கரு தானாக ஆல்பா துகள்களை உமிழும். (இய)

alpha particle - ஆல்பா துகள்: பல கதிரியக்கத் தனிமங்களால் உமிழப்படும் இம்மி. நேர்மின்னேற்ற(+)முடையது. ஈலியக் கருவோடு ஒத்தமையும் இரு அல்லணுக்கள் (நியூட்ரான்கள்) இரு முன்னணுக்கள் (புரோட்டான்கள்) ஆகியவற்றாலானது. (இய)

alpha rays - ஆல்பா கதிர்கள்: இவை விரைந்துசெல்லும் ஆல்பா துகள்களாலானவை. (இய)

alernation ofgenerations - தலைமுறை மாற்றம்: பூக்காத் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்றில் மாறி மாறி வரும் இரு தலைமுறைகள் ஒன்று சிதல் பயிர்த் தலைமுறை, (ஸ்போரோபைட்). மற்றொன்று பாலணுப் பயிர்த் தலைமுறை (கேமிடோபைட்). இவ்விரண்டும் அமைப்பிலும் இனப்பெருக்க முறையிலும் வேறுபடுபவை. எ-டு. பெரணி. இது ஒர் இருமயத் தாவரம். (உயி)

altimeter - உயரமானி: உயரத்தை அளக்கும் கருவி. வானூர்தியில் அமைந்திருப்பது. (இய)

alum - படிகாரம்: இணைதிறன் மூன்றுள்ள அலுமினியம், குரோமியம், இணைதிறன் ஒன்றுள்ள பொட்டாசியம், சோடியம் முதலிய தனிமங்களின் இரட்டைச் சல்பேட்டு எ-டு. பொட்டாஷ் சல்பேட்டும் அலுமினியம் சல்பேட்டும் சேர்ந்தது. K2SO4Al3(SO4)3 24H2O. (வேதி)

alumina - அலுமினா: Al2O3 அலுமினியம் ஆக்சைடு. வடிவமற்ற வெண்ணிறப் பொருள். இயற்கையில் குருத்தக் கல்லாகக் கிடைப்