பக்கம்:அறிவியல் அகராதி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inh

218

ins


Inhibitor-தணிப்பி: வினையூக்கியின் வினைவீதத்தைக் குறைக்கும் வேதிப்பொருள். இது வினைவழியை மாற்றுவதில்லை. எ.டு. அய்டிரஜன் சல்பைடு. அய்டிரஜன் சயனைடு.

Initial-தோற்றி: ஆக்கு திசுவிலுள்ள உயிரணு. நிலையாகத் தன்னைப் பெருக்கிப் புதிய அணுக்களைத் தாவரத்திற்கு அளிப்பது.வேறுபாடு அடைவதில்லை.(உயி)

Injection-ஊசிபோடல்: ஊசி மூலம் மருந்தை உடலில் செலுத்துதல். குருதியில் நேரடியாகக் கலப்பதால் விரைந்த பயனுண்டு. திசு, குருதிக்குழாய் முதலிய பகுதிகளில் ஊசி போடலாம்.(உயி)

Injuries-காயங்கள்: பா. Wounds. (உயி)

INMARSAT-இன்மார்சட்: அனைத்துலகக் கப்பல்சார் செயற்கைக் கோள் அமைப்பு. செயற்கை நிலாக்கள் செய்திகளைக் கப்பலுக்கு அளித்து உதவுவது. பா.Intelsat (இய)

Inner ear-உட்செவி: பா.Ear. (உயி)

Innominate artery-கிளைத்தமனி: பெருந்தமனி வளைவிவிருந்து கிளைக்கும் முதல் தமனி (உயி)

Innominate bone-இடுப்பெலும்பு: முதுகெலும்பிகளில் காணப்படும் இடுப்பெலும்பு. இடுப்பு மேல் எலும்பு, இடுப்பு முன் எலும்பு, இடுப்புப்பின் எலும்பு ஆகிய மூன்றினாலானது. (உயி)

Inoculation-தடுப்பூசி போடுதல்: 1. தடுப்பு மருந்தை உடலினுள் செலுத்துதல் கழிநோய் ஊசி. 2.புகுத்தல்; உட்செல்லவிடல். பெருக்கத்திற்காக வளர்ப்பு ஊடகத்தில் நுண்ணுயிரிகளைச் செலுத்துதல். பா. (உயி)

Inorganic chemistry-கனிம வேதியல்: உலோக அலோகத்தனி மங்களையும் அவற்றின் சேர்மங் களையும் ஆராயுந்துறை.(வேதி)

Input-உட்பாடு: இடுவரல்.ஒரு கருவியமைப்பினுள் செய்திகளைச் செலுத்துதல். ஒ.output.

Input device-உட்பாட்டுக் கருவியமைப்பு: கணிப்பொறிப் புற ஒருங்கில் உள்ளது. எ.டு. கை நெம்புகோல்:இக்கருவி கணிப்பொறிக்குள் செய்திகளை அனுப்புவது.(இய)

lNP crystal-ஐஎன்பி படிகம்: இண்டியம் பாஸ்பேட் படிகம். கணிப்பொறி முதலிய மின்னணு கருவியமைப்புகளில் சிலிகனுக்கு மாற்றாக அமைந்து புரட்சியை உண்டு பண்ண இருப்பது. செயல்திறத்தில் சிலிகனைவிடப் பன்மடங்கு சிறந்தது. இந்தியா இதனை உருவாக்கிய எட்டாவது நாடு. சென்னை அண்ணா பல்கலைக்கழக படிக வளர்ச்சி தேசிய மையம் இதனை உருவாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.(வேதி)

INSAT-இன்சட்: இந்தியச் செய்தித் தொடர்பு நிலா. பா. Indian Space efforts. (இய)

Insat series-இன்சட் வரிசை: