பக்கம்:அறிவியல் அகராதி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mid

269

mil


middle ear - நடுச்செவி: பறைக்குழி, மண்டை ஓட்டில் நீர் நிரம்பிய குழி, புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையிலுள்ளது. தொண்டையின் பின்புறத்தோடு செவிக் குழலினால் இணைக்கப்பட்டுள்ளது. பா. ear. (உயி)

midgut - நடுக்குடல்: கணுக்காலி, முதுகெலும்பிகள் ஆகியவற்றின் உணவுக் குழலின் மையப்பகுதி. உணவு செரிப்பதற்கும் உறிஞ்சப்படுவதற்கும் காரணம் (உயி)

midrib - நடுநரம்பு: இலையின் நடுவே உள்ளது. இலைப்பரப்பில் பலகிளை நரம்புகளை உண்டாக்குவது. இந்நரம்பமைப்பினால் பல இலை வகைகள் உண்டாதல்.(உயி)

migration-பருவ இடப்பெயர்ச்சி: பருவத்திற்கேற்ப விலங்குகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல். (உயி)

milk- பால்: நிறை உணவு. வெண்ணெய், நெய் முதலிய பொருள்களைக் கொடுப்பது. பால் பண்ணை. பொருள் வளமிக்க தொழிலாகும். (உயி)

milk sugar - பால்சர்க்கரை: லேக்டோஸ், (உயி)

milk teeth - பால்பற்கள்:குழந்தைகளின் விழும் பற்கள். (உயி)

milk of lime - சுண்ணாம்புநீர்: (வேதி)

milk of magnesia - மக்னீசியப்பால்: மக்னீசியம் அய்டிராக்சைடு. இது நீரில் கரைந்து பால் வெள்ளைத் தொங்கலை உண்டாக்குவது பேதி மருந்து. (வேதி)

milkyway - பால்வழி: விண்ணை இருட்டில் நோக்க, அடர்ந்த விண்மீன் வட்டங்கள் வடக்கிருந்து தெற்காக ஒளிக்கற்றை போல் தெரியும். இதுவே பால்வழி. இதில் பலஇலட்சக் கணக்கில் விண்மீன்கள் உள்ளன. (இய)

millerite - மில்லிரைட்டு: நிக்கல் சல்பைடு. மஞ்சள் நிறமுள்ள உலோகத்தாது. இங்கிலாந்து கனிமவியலார் மில்லர் பெயரால் அமைந்தது. (வேதி)

millimicron-மில்லிமைக்ரான்: பா.nanometre. (இய)

millipede - மரவட்டை: பயிருண்ணி, உருளை வடிவ உடல். தலையில் ஓரிணை உணரிகள். உடல் பல வட்டுக்களாலானது. முதல் மூன்று வட்டுகளைத் தவிர ஏனைய ஒவ்வொன்றும் ஈரிணை ஊரும் கால்களைக் கொண்டவை. காற்றுக் குழாய்கள் மூலம் மூச்சுவிடுதல். (உயி)

Millon's reagemt-மில்லன் வினையாக்கி: நைட்டிரிகக்காடி பாதரசம், நீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை. புரதத்தைக் கண்டறியப் பயன்படுவது.இவ்வினையாக்கியை ஆய்ந்து பார்க்க வேண்டிய பொருளோடு வெப்பப்படுத்தப்படும் பொழுது செங்கல் சிவப்பு நிற வீழ்படிவு உண்டாகும். இதுவே புரதத்திற்கு ஆய்வு (உயி)

milt - விந்து: ஆண்மீனின் விந்து