பக்கம்:அறிவியல் அகராதி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது ஒரு தொழில்துறை நுணுக்கம். வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் தொழில்துறையினால் ஏற்பட்டது.

modulation-பண்பேற்றம்: ஊர்தி அலையில் குறிபாட்டைச் சேர்த்தல். இதனால் குறிபாட்டிலுள்ள செய்தி ஊர்தியலையோடு சேர்ந்து செல்லும். ஒ.demodulation (இய)

module - பொதி: 1. ஒரு கட்டிலுள்ள பகுதிகள் ஒரு முழு வேலை அலகாக ஒரு தொகுதியில் இயங்குதல், 2. ஓர் அலகின் பல கிளைகள், 3. கூண்டு: திங்கள் கூண்டு. (இய)

modulus - எண்: ஒரு விளைவு அல்லது விசையின் அளவைக் குறிப்பது யங் எண். (இய)

molality-மோலமை: ஒரு கிலோ கிராம் தூய கரைப்பானிலுள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை மோலால் என்பது கரைபொருளின் எடையைக் குறிப்பது. (வேதி)

molars - கடைவாய்ப்பற்கள்: இரு தாடைகளிலுமுள்ள அரைக்கும் பற்கள். இவை கடைவாய் முன் பற்கள் கடைவாய்ப் பின்பற்கள் என இருவகைப்படும். (உயி)

molarity - மோலாரிமை: ஒரு லிட்டர் கரைசலிலுள்ள கரைபொருளின் மோல்களின் எண்ணிக்கை.மோலார் என்பது கரைபொருளின் பருமனைக் குறிக்கும். (வேதி)

molasses - கழிவுப்பாகு: கரும்புச்சக்கையிலிருந்து கிடைப்பது, ஆல்ககால் தயாரிக்கப் பயன்படுவது. (வேதி)

mole - அகழெலி: சிறிய பூச்சி உண்ணும் விலங்கு சிறிய கண்கள். மென்மையான மயிர். வளை தோண்டி வாழ்வது. (உயி)

mole - மோல்: அலகுச்சொல். துய கார்பன் 12 இன் 12 கிராம்களில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அத்தனை அடிப்படைத் துகள்கள் உள்ள பொருளின் அளவு. இங்குத் துகள்கள் என்பது அணு, அயனி. மூலக்கூறு, படிமூலி ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது, ஒரு மோல் 6.022045x1011 அடிப்படைத்துகள்களைக் கொண்டிருக்கும். (வேதி)

mole fraction- மோல் பின்னம்: ஒரு கரைசலிலுள்ள ஒரு பொருளின் மோல்களின் எண்ணிக்கைக்கும் அக்கரைசலிலுள்ள அனைத்துப் பொருள்களின் மோல்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வீதம். இதற்கு அலகில்லை. வெறும் எண். (வேதி)

molecular biology - மூலக்கூறு உயிரியல்: உயிரியலில் சிறப்புள்ள மூலக்கூறுகளின் மரபணு அமைப்பினை ஆராயுந்துறை. (உயி)

molecular formula - மூலக்கூறு வாய்பாடு: ஒரு சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றிலுள்ள அணுக்கள், அயனிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறியீடுகளால் குறிக்கும் அமைப்பு மூலக்