பக்கம்:அறிவியல் அகராதி.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

par

315

par


திசு: பா. tissue, kinds of (உயி)

parental care - பெற்றோர் பாதுகாப்பு: இளம் உயிர்கள் நன்கு வளர்ந்து தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் நிலையை அடையும்வரை, அவை தங்கள் பெற்றோர்களால் பேணப்படுகின்றன. இப்பேணும் நிலையே பெற்றோர் பாதுகாப்பு ஆகும். இது பாலூட்டிகளில் அதிகமுள்ளது. தவிர, மீன்களிடமும் பறவைகளிடமும் காணப்படுகிறது. இதனைச் சேய்ப் பேணல் என்றும் கூறலாம். (உயி)

parent - தாய்: ஒரு நியூகிளைடு, கதிரியக்கச் சிதைவடைந்து மற்றொரு நியூகிளைடாக மாறுதல். (உயி)

paresis அரைவாதம்: கூம்பு வழிகளில் பிளவுகள் ஏற்பட்டு நலிவு உண்டாதல். (உயி:

parietal -பக்கச் சுவர்: உடற் குழியின் வெளிப்புறச் சுவர். (உயி)

parietal eye - பக்கக் கண்: மூன்றாங்கண். (உயி)

parietal placentation - சுவர்ச் சுலமைவு: பா. placentation. (உயி)

parity - இருமை: P ஒரு தொகுதியின் அடிப்படைப் பண்பு. ஒர் ஆடியில் மறிக்கப்படும் நிறம். இது ஒரு குவாண்டம் (சிப்ப) எண். (இய)

parotid gland - செவியருகுச் சுரப்பி: செவிமடலுக்கு அருகேயுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளின் தொகுதி (உயி)

paroxonicfoot-விரல் முனைப்புக் கால்: 3,4ஆம் விரல்கள் முனைப் பாகவும் 2,5ஆம் விரல்கள் குறைந்தும் இருக்கும் கால். எ-டு பன்றி. (உயி)

parrot - கிளி: அலகு வளைந்தது. நிறம் பசுமை. காலில் முன் 2 விரல்களும் பின் 2 விரல்களும் உள்ளன. (உயி)

parthenocarpy - கருவுறாக் கனி: கருவுறாமல் உண்டாகுங்கனி, இதை விதையிலாக் கனி என்றும் கூறலாம். எ-டு வாழை, அன்னாசி,

parthenogenesis -கருவுறா (கன்னி இனப்பெருக்கம்): கருவுறா முட்டை ஒர் உயிராக வளர்தல். (உயி)

parthenospore - கருவுறாச்சிதல்: ஒய்வு கொள்ளும் தடித்த கருவுடைய சிதல். கருவுறாப் பெண் பாலணுவிலிருந்து உண்டாதல், எ-டு. பாசி, (உயி)

particle - துகள்: சிறிய பகுதி ஒரு சிறிய பொருளில் அதன் அண்டைப்பகுதிகளின் இடைத் தொலைவு புறக்கணிக்குமளவுக்குச் சிறியதாக இருந்தால், அது துகள் எனப்படும். ஒரு பொருளில் பல துகள்கள் உள்ளன. பா.elementary partides. (இய)

particle physics - துகள் இயற்பியல்: ஒரு பொருளிலுள்ள துகள்களை ஆராயுந்துறை. மின்னணு அல்லணு, முன்னணு முதலிய 17 துகள்கள் பொருளில் உள்ளன. பா. elementary particles. (இய)