பக்கம்:அறிவியல் அகராதி.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pha

324

phe


கள் கொண்டுள்ள காலம் (உயி)

Pharmacist -மருந்தாளர்: மருந்தைச் செய்து அதைப் பயன் படுத்த உரிமம் பெற்றவர். ஒ. compounder. (மரு)

Pharmacology -மருந்தியல்: மருந்துகளை ஆராயுந்துறை. அதாவது மனிதனிடத்து மருந்துகள் உண்டாக்கும் விளைவுகளை ஆராய்வது. (மரு)

Pharmacy -மருந்தாளுமியல்: 1.மருந்துகள் செய்தல், அவற்றைப் பயன்படுத்தல் ஆகியவற்றை ஆராயுந்துறை. உடல் நலவியலின் ஒரு பிரிவு. 2. மருத்தகம் மருந்துகள் விற்குமிடம் (மரு)

Pharyngitis -தொண்டையழற்சி: தொண்டைச் சளிப்படலம் வீங்குதல். (உயி)

Pharyngology -தொண்டை இயல்: தொண்டை தொண்டை நோய்கள் ஆகியவற்றை ஆராயுத் துறை. (உயி)

Pharyngoscope -தொண்டை நோக்கி: தொண்டையை ஆராயப் பயன்படுங்கருவி. (உயி)

Pharyngotomy -தொண்டை நறுக்கம்: தொண்டை அறுவை. (உயி)

Pharynx - தொண்டை: உணவு வழியில் வாய்க்கடுத்த பகுதி (உயி)

Phase - நிலை: 1. ஒரு வேதித் தொகுதியின் இயற்பியல் முறையில் பிரிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று. எ-டு பனிக்கட்டியும் நீரும் சேர்ந்த கலவை. இருநிலைகளைக் கொண்டது. பனிக்கட்டி திண்மநிலை. நீர் நீர்மநிலை. ஒரு நிலை உடைய தொகுதி. ஒரு படித்தானது. ஒரு நிலைக்கு மேலுள்ள தொகுதி பல படித்தானது. 2. தாவரத்தைப் பொறுத்தவரை இருநிலைகள் உண்டு. 1. உடல் நிலை (வெஜடேட்டிவ்பேஸ்): தாவரம் இலைகளையும் கிளைகளையும் கொண்டிருத்தல். 2. இனப்பெருக்க நிலை (ரீபுரடக்வ் பேஸ்): பூக்களையும் கனிகளையும் உண்டாக்குவது. 3. கட்டம் ஒரு சுற்றிலுள்ள நிலை 4. பிறை (ப.து)

Phase diagram -கட்டப்படம்: கொடுக்கப்பட்ட அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் ஒரு பொருள் இருக்கும் நிலையைக் குறிக்கும் வரைபடம். (இய)

Phase of the moon -திங்கள் பிறைகள்: திங்களின் வளர்பிறையும் (நிறைநிலா)தேய்பிறையும் (இருள்நிலா) (இய)

Pheasant - வான்கோழி: சேவல் போன்ற பறவை. நீளம் 95 செ.மீ. நீண்டவால். ஒளிர்வான இறகுகள். விளையாட்டுப்பறவை. கறி உணவாகப் பயன்படுவது.(உயி)

Phenol -பினாயில்: C6H6OH. கார்பாலிக் காடி கார்பாலிக மணமுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரையாது. அரிக்கக் கூடியது. நஞ்சு தொற்றுநீக்கி. சாயங்களும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது. (வேதி)