பக்கம்:அறிவியல் அகராதி.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rob

374

roc


துத்தக் கார்பனேட்டு ∆ துத்த ஆக்சைடு + கார்பன்டை ஆக்சைடு

ZnCO3 ZnO + CO2

Robert Huber, Dr. - டாக்டர் இராபர்ட் ஹூபர்: நோபல் பரிசு பெற்ற அறிவியலார். இவர் பேட்டர்சன் முறைகளை உருவாக்கக் காரணமாக இருந்தவர். உயிர் பெருமூலக் கூறுகளின் முப்பரும அமைப்பை ஆராய்வதற்குரிய கருவிகள் இம்முறைகள். ஒளிச்சேர்க்கை வினைமையத்தின் முப்பரும அமைப்பை இவர் விரிவாக விளக்கிப் புகழ்பெற்றவர். (உயி)

robot-தொலைஇயக்கி: கணிப் பொறியால் இயங்கும் எந்திரம். அலுப்பு சலிப்பு இல்லாமல் வேலைகளைத் திரும்பத் திரும்ப இதன் மூலம் செய்யலாம். தவிர, வண்ணத்தெளிப்பு பற்ற வைத்து இணைத்தல் முதலிய கடின வேலைகளும் இதன் மூலம் நடைபெறுபவை. 2. நிகழ்நிரல் அமைத்து எந்திரங்களைக் கட்டுப் படுத்துவது. 3 உற்பத்தித் துறையில் சரக்குகளையும் பொருள்களையும் கையாளுந் தானியங்கிக் கருவித் தொகுதி 4 ஒரு செயற்கைக்கோள். 5. நடக்கும் பேசும் கற்பனை எந்திர மனிதன். (தொது)

robotics-தொலை இயக்குவியல்: முன்னரே உறுதி செய்யப்பெற்ற செயல்களை நிறைவேற்றக் கணிப் பொறியால் கட்டுப்படுத்தப் பெறும் எந்திரங்களை ஆராயுந்துறை. உந்துவண்டியில் உலோகத்தைப் பற்றவைத்து இணைத்தல், கோளின் மண்ணியல்பைப் பகுத்துப் பார்த்தல், திங்களின் மண் நன்கு பகுத்துப் பார்க்கப் பெற்றுள்ளது. ஒ. cybernetics (தொது)

Rochelle salt - ராசல் உப்பு: (KNAC4H4O4) பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட் வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது. மின்னழுத்தப் பண்புகள் உண்டு. ரொட்டித் தொழிலில் பயன்படுவது. (வேதி)

rod - கோல்: ஒளியுணர்வுடைய கண்ணறை வகை இரண்டில் ஒன்று. விழித்திரையில் காணப் படுவது. மங்கிய ஒளியில் பார்வை தெரிவதோடு தொடர்புடையது. பா. core. (உயி)

rocket - ஏவுகணை: அறிவியல் முறையில் நன்கு திருத்தி அமைக்கப்பட்ட வாணமே ஏவுகணை. தலை, உடல், வால் என்னும் முன்று பகுதிகளைக் கொண்டது. தலையில் முகப்பெடை இருக்கும். உடலின் மேல் பகுதியில் சுழலி முதலிய கட்டுப்பாட்டுக் கருவிகளும கீழ்ப்பகுதியில் எரி பொருள் தொட்டிகளும் இருக்கும். வாலில் மின் உந்தி, விசையாழி, நிலைப்புச் சிறகுகள், தகடுகள், பீறிடும் குழாய் முதலிய பகுதிகள் இருக்கும். முதன்மையாகச் செயற்கை நிலாக்களை ஏவவும் காற்று மேல் வெளி ஆராய்ச்சிக்கும் பயன்படுவது. (இய)