பக்கம்:அறிவியல் அகராதி.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spi

411

spo


காய்ச்சி வடிக்கக் கிடைப்பது. இது 95% ஆல்ககால். இதைச் சுட்ட கண்ணாம்புடன் சேர்த்து மேலும் வடித்துப் பகுக்கக் கிடைப்பது தனி ஆல்ககால். (அப்சல்யூட் ஆல்ககால்) இது நீரற்றது. பொதுவாக, எத்தில் ஆல்ககால் கரைப்பானாகவும பெட்ரோலுடன் சேர்த்துத் திறன் ஆல்ககால் செய்யவும் மருந்துகள் செய்யவும் பயன்படுவது. (வேதி)

spirogyra - ஸ்பைரோகைரா: சுருளி இழையுள்ள பசும்பாசி. தண்ணிரில் காணப்படுவது. சுருள் வடிவப் பகங்கணிகம் இருப்பது சிறப்பு. (உயி)

spleen - மண்ணிரல்: இரைப்பையின்மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு. குருதியமைப்பை மாற்றுவது. அதாவது, நாட்பட்ட சிவப்பணுக்களை அழிக்கிறது. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது. குருதிச்சேமிப்பகம். தவிர, வெள்ளணுக்களையும் கணிமத்தையும் (ப்ளாஸ்மா) உண்டாக்குகிறது. (உயி)

sponge - கடற்பஞ்சு: இடம் பெயரா நீர் வாழ்வி, புரையுடலி (பொரிபெரா) வகுப்பைச் சார்ந்தது. குவளை வடிவப்பையாகும். உடல் மேல், ஒரு துளையுள்ளது. தவிர, உடல்முழுதும் துளைகள் அல்லது புரைகள் காணப்படுகின்றன. உடலின் உள்ளே ஒரே ஒரு குழியுள்ளது. ஒத்தி எடுக்கவும் துடைக்கவும் பயன்படுகிறது. பல கடற் பஞ்சுகளின் கூட்டில் காணப்படும் கொம்புப் பொருளுக்கு ஸ்பான்ஜின் என்று பெயர். (உயி)

sporangium - சிதலகம்: சிதல்கள் உண்டாகும் பை, பூக்காத்தாவர இனப்பெருக்க உறுப்பினால் உண்டாவது. பூக்காத் தாவரங்களுக்கே உரியது. பூக்குந்தாவரங்களில் இது விதை. ஆகவே, விதைக்கு முந்தியது சிதல். (உயி)

spore mother cell, sporocyte - சிதல் தாயணு, சிதலணு: குன்றல் பிரிவினால் ஒருமயச் சிதல்கள் நான்கினையளிக்கும் கண்ணறை. (உயி)

sporogonium - சிதல்மம்: மாசிகளில் காணப்படும் கருப்பயிர்த் தலைமுறை. கருவணுவிலிருந்து உண்டாவது. இதற்கு அடி, பொதிகை, காம்பு என்னும் மூன்று பகுதிகள் உண்டு. பாலணுப் பயிர்த் தலைமுறையில் ஒட்டுண்ணியாக வாழ்வது. (உயி)

sporophore - சிதல்தாங்கி: சில பூஞ்சைகளில் காணப்படும் காம்பு. இது சிதல்களை உண்டாக்குவது. (உயி)

sporophyll - சிதல்இலை: சிதல் உள்ளது சிதலகம். இச்சிதலகத்தைக் கொண்டிருப்பது சிதல் இலை. (உயி)

sporophyte -சிடல் டாவரம்: சிதல் பயிர். பெரணி முதலிய தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் இது