பக்கம்:அறிவியல் அகராதி.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



tap

426

tax


செய்யப்படுவது. போல்சன் என்பார் எஃகின் காந்தப் பண்புகளை ஒலிப்பதிவிற்காக முதன்முதலில் பயன்படுத்தினார். இது காந்த ஆற்றலைத் தேக்கி மீண்டும் விடவல்லது.

tapiaco - மரவள்ளிக்கிழங்கு: குச்சிக்கிழங்கு. மைதாமாவு தயாரிக்கப் பயன்படுவது. (உயி)

tap root - ஆணிவேர்: முதல் வேர். இரு விதையிலைத் தாவரங்களுக்குரியது. (உயி)

tapeworm - நாடாப்புழு: தட்டைப் புழு. ஓர் ஒட்டுண்ணியுமாகும். வாய்ப்பகுதிகளோ செரித்தல் மண்டலமோ இல்லை. முதுகெலும்பிகளின் குடல் சுவரில் ஒட்டி வாழ்வது. (உயி)

tar - தார்: நிலக்கரியைச் சிதைத்து வடிக்கக் கிடைப்பது. ஒட்டக் கூடிய கரும்பொருள். இஃது ஓர் அரும் பொருட்சுரங்கம். பென்சீன் முதலிய கரைப்பான்கள் செய்யவும் பினால் முதலிய நச்சுத் தடைகள் செய்யவும், ஆந்திரசீன் முதலிய சாயங்கள் செய்யவும், கரிப்பிசின் சாலை போடவும் பயன்படுகின்றன. (வேதி)

tarsal bones - கணுக்கால் எலும்புகள்: பா. tarsus. (உயி)

tarsus - கணுவம்: 1. முதுகெலும்பிகளின் கணுவெலும்புத் திரட்சி. 2. பூச்சி, சிலந்தி ஆகியவற்றின் காலிலுள்ள ஐந்தாம் கணு அல்லது புறக்கணு. (உயி)

tartaric acid - டார்டாரிகக் காடி; இயற்கையாகக் கிடைக்கும் கார்பாக்சிலிகக் காடிப்படிகம். சமையல் தூளிலும் உணவுப் பொருள்களிலும் பயன்படுவது. டார்டாரிலிருந்து பெறப்படுவது. (வேதி)

taste - சுவை: விரும்பத்தக்கதும் தகாததுமான உணவுகளை வேறு படுத்தியறியும் உயிரிகளின் வேதி உணர்வு, சுவையை உணர்வது சுவையரும்புகள். (உயி)

taste buds - சுவை அரும்புகள்: நாக்கிலுள்ள தசைப்படலத்தில் பல காம்புகள் உள்ளன. இவற்றிலுள்ள சுவையணுக்களின் திரட்சியே சுவையரும்புகள். நாக்கின் நுனி இனிப்பையும், அடி கசப்பையும், பக்கங்கள் புளிப்பையும் உணர்கின்றன. உப்பையும் துவர்ப்பையும் எல்லாச் சுவை யரும்புகளும் உணரும். ஒரு பொருள் நீர்மநிலையில் இருந்தாலே, அதன் சுவையினை நாக்கு உணர இயலும். (உயி)

taxidemy - பாடஞ் செய்தல்: உள்ளுறுப்புகள் நீங்கிய விலங்குகளின் தோல்களை முழுதுமாகவோ பகுதியாகவோ உள்ளே பஞ்சு போன்ற பொருளை அடைத்து முழு உருவம் கொடுத்தலுக்குப் பாடஞ் செய்தல் என்று பெயர். கீரியின் பாடம், உயிர் கீரிப்பிள்ளைப் போன்றே இருக்கும். விலங்குக் காட்சியகங்களில் இது போன்று பாடஞ் செய்த பொருள்கள் பல இருக்கும். விலங்குகளைப் பாடஞ் செய்தல் ஒரு கலையாகும். (உயி)