பக்கம்:அறிவியல் அகராதி.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



tax

427

tec


taxis-அமைவுஇயக்கம்: தூண்டல் நோக்கி உயிரி முழுதும் அசைதல், எ-டு ஒளி அமைவியக்கம். (உயி)

taxon - டேக்சான்: அலகுச் சொல். வகைப்பாட்டின் அலகு. (உயி)

taxonomy - வகைப்பாட்டியல்: வேறு பெயர் முறைப்பாட்டியல். வகைப்படுத்தலின் நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் ஆராயுந்துறை. இதன் தந்தை ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ் 1707 - 1778) ஆவார். இது தாவர வகைப்பாட்டியல், விலங்கு வகைப்பாட்டியல் என இரு வகைப்படும். பொதுவாக, ஓர் உயிரியின் உறுப்பமைவு, வேலை, வளர்ச்சி முதலியவற்றிலுள்ள ஒற்றுமை வேற்றுமை அடிப்படையில், அது வகைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு வகைப்படுத்துவதில்

  1. உலகம் (கிங்கடம்)
  2. பெரும்பிரிவு (பைலம்)
  3. வகுப்பு (கிளாஸ்)
  4. வரிசை (ஆர்டர் அல்லது பிரிவு டிவிஷன்)
  5. குடும்பம் (பேமிலி)
  6. பேரினம் (ஜெனஸ்)
  7. சிறப்பினம் (ஸ்பீஷிஸ்)

எனப் பல அலகுகள் உண்டு. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சிறப்பினமே. எல்லா முக்கிய உருவியல் பண்புகளிலும் ஒன்றை மற்றொன்று ஒத்தமையும் தனி உயிரிகளைக் கொண்டதே சிறப்பினம். ஓர் உயிரியை இனங் கண்டறிய, அதன் சிறப்பினப் பெயரே மிக இன்றியமையாதது. இன்று இத்துறை பல நிலைகளிலும் நன்கு வளர்ந்துள்ளது. (உயி)

tears - கண்ணீர்: கண்ணீர்ச் கரப்பியின் சுரப்பு. இதில் புரைத்தடுப்பியாக உள்ள லைசோசைம் என்னும் நொதியுள்ளது. (உயி)

tecnetium - டெக்னிடியம்: Tc. மாறு நிலைத்தனிமம். மாலிப்டினத்தை அல்லணுக்களால் தகர்க்கச் செயற்கையாகக் கிடைப்பது. யுரேனியத்தைப் பிளந்தும் பெறலாம். கதிரியக்கத் தன்மையுள்ளது. (வேதி)

technique - நுட்பம்: நுணுக்கம். செய்து காட்டும் முறை. கையாளுந்திறன். ஒ. mechanism, (ப.து)

technology - தொழில்நுட்பவியல்: தொழில் நுணுக்கவியல். பயனுறு அறிவியல். வாழ்க்கைப் பயனை ஆராயுந்துறை. நுட்பம் பொருந்திய எத்துறையும் வாழ்க்கைக்குப் பயன்படுமானால், அது தொழில் நுட்பவியலே. பரந்தும் விரிந்துமுள்ள துறை. இது பல வகைப்படும்: தோல் தொழில்நுட்பவியல், தாள் தொழில்நுட்பவியல். (ப.து)

technology transfer - தொழில் நுட்பமாற்றுகை: ஒரு துறையில் உருவான கருத்துகளும் புனைவு