பக்கம்:அறிவியல் அகராதி.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

thr

436

tim


பெட்டிக்குச் செல்லத் தானே திறந்து உதவுகிறது. இய,

thrust-இறுக்கம்: இறுக்குவிசை மொத்தப் பரப்பின் மீது ஏற்படும் அழுத்தம் இறுக்கமாகும். T=PA T-இறுக்கம். P-அழுத்தம், A-பரப்பு (இய) 2. ஏவுகணை உண்டாக்கும் முன்னியக்கு விசை,

thulium - தூலியம்:Tm. மென்மையான வெள்ளி நிற உலோகம், தகடாக்கலாம், கம்பியாக்கலாம். ஏனைய இலாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ளது. வேதி)

thunder - இடி: மின்னலை உருவாக்கும் மின்போக்கில் தோன்றும் ஒலி அழுத்தஅலை உயர்வால் நெருக்கங்களும் நெகிழ்வுகளும் உண்டாகும். இவையே இடி ஒலியை எழுப்புபவை. (இய)

thymin - தைமின்: டிஎன்ஏ விலுள்ள நைட்ரஜன் சார் முலம். பிரிமிடின் வளைய அமைப்பைக் கொண்டது. (வேதி)

thymus - தைமஸ்: ஒரு நாளமில்லாச் சுரப்பி (உயி)

thyratron - எதிர்வாய்த் திறப்பி: வளி நிரம்பிய திறப்பு அமைப்பு. வெப்பப்படுத்திய எதிர்மின் வாயைக் கொண்டது. மிக உயர்ந்த மின்னோட்டங்களைக் கொண்டு செல்வது. (இய)

thyroid - தைராய்டு: இது தொண்டைச் சுரப்பியாகும். மூச்சுக் குழலுக்கருகில் உள்ளது. இரு மடல்களாலானது. இதன் சுரப்பு தைராக்சைன். இஃது உடல் வளர்ச்சியையும் வளர் சிதை மாற்றத்தையும் ஒழுங்கு படுத்துகிறது. அறிவு வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் காரணம். இச்சுரப்பியின் குறை நோய்கள் கழலையும் குருளைத் தன்மையுமாகும்.

thyristor - படிகத்திருத்தி: எதிர் வாய்த்திறப்பி போன்ற குறை கடத்தியமைப்பு. திண்ம நிலைச் சொடுக்கி. சிலிகன் கட்டுப்பாடு கொண்ட திருத்தி இய)

tibia - கீழ்க்கால் உள் எலும்பு: முழங்கால் எலும்புகளில் ஒன்று. மற்றொன்று கீழ்க்கால்வெளி எலும்பு (உயி)

tree - மரம்: வேலைக்குப் பயன்படும் கட்டை முற்றிய மரங்களே அறுக்கப்பட்டு மரவாடிக்கு வருகின்றன. மரத்தொழில் சிறந்த வாணிபச் சிறப்புடையது. தேக்கு மரம் விலை உயர்ந்தது. மரம் எரிபொருள் மற்றும் பலவேலைகளுக்குப் பயன்படுவது. (உயி)

time-நேரம்: காலத்தின் ஒரு பகுதி.இது உள்ளூர் நேரம், திட்ட நேரம், கிரீன்விச்சு நேரம் என மூவகைப்படும். (பு.அறி)

timbre - ஒலிப்பண்பு: அடிப்படை அதிர்வெண் மேற்கரங்களிலிருந்து வருவது (இய)

time, Greenwich - கிரீன்விச்சு நேரம்: கிரீன்விச்சு நேரம் மைய வரைக்குரிய (மெரிடியன்) சராசரி கதிரவன் நேரம். அதாவது முதன்மை நெடுக்குக் கோட்டில்