பக்கம்:அறிவியல் அகராதி.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tra

442

tra


தை மையமாகக் கொண்ட கருவி யமைப்பு. இது ஒரு வழிக்கடத்தியாகும். அதாவது ஒருதிசையிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும். வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி ஆகியவற்றின் மின்சுற்றுகளின் அடிப்படையாகும். இது ஒரு முனை வழிக்கடத்தி, இருமுனை வழிக் கடத்தி எனப் பல வகைப்படும். வானொலித் திறப்பியினை நீக்கி, அதன் வேலையினைச் செய்வதாகும். மின்னலைகளைப் பெருக்குவது. உயர்ந்த மின்னலைகளை உண்டாக்குவது, எதிர்மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது ஆகியவை இதன் முக்கிய வேலைகள். அறிவியலிலும் தொழில் நுணுக்க இயலிலும் ஒரு புரட்சி உண்டாக்கிய படிகம் (இய) பா, laser

transition - நிலைமாறல், சடுதி மாற்றம்: டிஎன்ஏவில் ஒரு பியூரின் மூலம் மற்றொன்றினால் பதிலீடு செய்யப்படுதல். ஒ. transversion, (ப.து) .

transition elements - மாறு நிலைத் தனிமங்கள்: தனிம வரிசை அட்டவணையில் மூன்று வரிசைகளிலுள்ள தனிமங்கள். 1. ஸ்காண்டியம் முதல் துத்தநாகம் வரை 2. எட்ரியம் முதல் காட்மியம் வரை 3. இலேந்தனம் முதல் பாதரசம் வரை. இவை எல்லாம் உலோகங்களே. இவற்றின் பண்புகள் 1. இணைதிறன்கள் வேறுபடுபவை. 2. பல கனிமக் கலவைகளை உண்டாக்குபவை 3. இவற்றின் சேர்மங்கள் நிறமுள்ளவை. (வேதி)

transition temperature - மாறு வெப்பநிலை: ஒரு பொருளில் திட்டமான இயற்பியல் மாற்றம் நடைபெறும் வெப்பநிலை, எ-டு நீர் ஆவியாதல். (வேதி)

transition state - மாறுநிலை: குறுகிய வாழ்வுடைய அதிக ஆற்றல் கொண்ட மூலக்கூறு. படி மூலி அல்லது அயனி (வேதி)

transition zone - மாறுநிலை மண்டலம்: குழாய்த்திசுத் தாவரத்திலுள்ள மண்டலம். இங்கு வேர் மற்றும் தண்டக உறுப்புகள் இணைகின்றன. மேலும் இங்குக் குழாய்த்திசு அமைப்பு, வேர் குழாய்த்திசு அமைப்புக்கும் இடைப்பட்டதாக இருக்கும். (உயி)

translation - பெயர்ப்பு: தூது ஆர்என்ஏவில் பதிந்துள்ள மரபுச் செய்தி பெயர்க்கப்பெற்றுப் புரதமாக மாற்றப்படுதல் புரத தொகுப்பிகளில் (ரிபோசோம்களில்) பகர்ப்பு நடைபெறுதல். (உயி)

translocation - கடத்தல்: தாவரத்தின் ஊட்டப் பொருள்கள் அதன் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லுதல். இதனை நொதிச்செயல் ஊக்குவிப்பது. பா. transpiration. (உயி)

transmitter - செலுத்தி: செய்தித் தொடர்புக்காக வானொலி அதிர்வெண் மின்காந்த அலைகளை உண்டாக்கிப் பரப்பும் கருவியமைப்பு. (இய)