பக்கம்:அறிவியல் அகராதி.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vec

455

ven


vector product -திசைசாரிப் பெருக்கற்பலன்: ஒரு திசைச் சாரியைப் பெற, இரு திசைச் சாரியைப் பெருக்குதல். எ-டு a, b ஆகியவற்றின் திசைச்சாரிப் பெருக்கற்பலன், axb, (இய)

vector quantity -திசைச்சாரி அளவு: இயற்பியல் அளவு. இதில் அளவும் திசையும் குறிக்கப்பட வேண்டும். விசை, நேர்விரைவு முதலியவை திசைசார் அளவுகளாகும்.ஒ. Scalar quantity (இய).

vegetative propagation-உடல் இனப்பெருக்கம்: விதையில்லாமல் உறுப்புகள் மூலம் நடைபெறுவது உறுப்புகள் என்பவை அரும்புகள், கிழங்குகள், தண்டுகள், இலைகள் ஆகியவற்றைக் குறிக்கும். எ.டு. மா, கொய்யா, பா. asexual reproduction, (உயி)

vein- 1. சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியினை இதயத்திற்கு எடுத்து வரும் குழாய். நுரையீரல் சிரைமட்டும் உயிர் வளியுள்ள குருதியைக் கொண்டு செல்வது. சிரைகளில் பெரியவை கீழ்ப்பெருஞ்சிரையும் மேற்பெருஞ்சிரையுமாகும். 2. நரம்பு: இலை நரம்பு, இறகு நரம்பு, மனித உடல் நரம்பு (உயி)

velocity நேர்விரைவு: ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி வீதம். குறிப்பிட்ட திசையில் ஒரு பொருளின் விரைவு. ஆகவே, இது திசைச்சாரி (வெக்டார் குவாண்டிட்டி) அளவு ஆகும். ஆனால் விரைவு அளக்கக்கூடிய அளவு (ஸ்கேலார் குவாண்டிட்டி) ஆகும். அலகு மீ/வி. ஒ. acceleration (இய)

velocity, angular-கோணநேர் விரைவு: ஆரக்கோடு ஒரு வினாடியில் உண்டாக்கும் கோணம். சுருக்கமாக இதனைக் கோண இடப்பெயர்ச்சியின் மாறுமளவு எனலாம்.

கோண நேர் விரைவு ω =θ/t

θ-தீட்டா t-நேரம் ω-ஒமேகா அலகு ரேடியன் / வினாடி (இய)

velocity ratio, distance ratio-நேர்விரைவு வீதம், தொலை வீதம்: ஒரு தனி எந்திரத்தில் ஒரே நேரத்தில் முயற்சியால் நகரும் தொலைவுக்கும் பளுவால் நகரும் தொலைவுக்குமுள்ள வீதம் (இய)

vena Cava - பெருஞ்சிரை: கீழ்ப்பெருஞ்சிரை,மேற்பெருஞ்சிரை. உடலின் பல பகுதிகளிலிருந்தும் கரி ஈராக்சைடு கலந்த குருதியை இதயத்திற்குக் கொண்டு வரு பவை. முன்னது மார்பு, கால்கள் முதலியவற்றிலிருந்தும் பின்னது தலை, கையிலிருந்தும் குருதி யைக் கொண்டு வருபவை. (உயி),

venation -நரம்பமைவு: 1.இலையில் நரம்புகள் அமைந் திருக்கும் முறை. 2. பூச்சிச் சிறகில் நரம்புகள் அமைந்துள்ள பாங்கு. (உயி).

venn diagram -வென் படம்: ஜான்வென் (1834 - 1923) என்பார் அமைந்த படம். இதில் கணங் களும் அவற்றின் தொடர்புகளும்