பக்கம்:அறிவியல் அகராதி.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480


offspring - கால்வழி: குழந்தை குட்டி. (உயி)

pad - திண்டு, பட்டை. (ப. து)

paddle - துடுப்பு. (ப. து)

pedal - மிதிகட்டை, மிதிபலகை. (ப. து)

prephase - முதல்நிலை: உயிரணுவின் இழைப்பிரிவில் முன்னதாக வருவது. (உயி)

proximal end - அண்மை முனை: அருகில் உள்ள முனை ஒ. distal end, (உயி)

RDF - refuse-derived fuel - ஆர்டிஎஃப்: கழிவுவழி எரிபொருள். (வேதி)

RDX - Research Department Explosive - ஆர்டிஎக்ஸ்: ஆராய்ச்சித்துறை வெடிபொருள், வேறுபெயர் சைக்ளோனைட் (வேதி)

resistor - தடையளிப்பி: மின்சாரத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கும் பொருள் (இய)

resultant - தொகுபயன்: இரு விசைகளுக்குச் சமமாக இருப்பது. (இய)

standard petal - கொடியல்லி: அவரைப் பூவிலுள்ள தனித்த அல்லி. பா. keel (உயி)

staple crop - முதன்மைப் பயிர்: அரிசி, கோதுமை. (உயி)

telecast - ஒளிபரப்பு: தொலைக்காட்சியில் நடை பெறுவது ஒ. broadcasting (தொ. நு)

teleconferencing - தொலைக் கூட்டம்: தொலைக்காட்சி வழி நடைபெறுவது, கருத்துக் கூட்டம். (தொ. நு)

telemedicine - தொலைமருத்துவம்: தொலைவிலிருந்தோ உலகளவிலோ மருத்துவச் செய்திகளைப் பெறுதல். இதற்கு இணையம் பயன்படுகிறது. (தொ.நு)

teleshopping - தொலைபேசி வழிப்பொருள் வாங்கல்: தொலைபேசி மூலம் வணிகருக்குத் தெரிவித்து வேண்டிய பொருள்களை வாங்குதல். (தொ.நு)

telophase - முடிவுநிலை: உயிரணுவில் இழைப்பிரிவில் நடைபெறும் நான்காம் நிலை, (உயி)

TNT - டிஎன்டி: Tri Nitro Toluene. முந்நைட்ரோ டூலின், உயர்ந்த வெடிபொருள். ஒ. DDT, dynamite, RDX. (வேதி)

transfusion - குருதி செலுத்தல்: சிரை வழியாகக் குருதியை வேண்டிய அளவு செலுத்தல். குருதி இழப்பு அல்லது பற்றாக்குறையைத் தடுக்க இச்செயல் நடைபெறுவது. அளிப்பவரும் பெறுபவரும் எயிட்ஸ் நோய் இல்லாதவராக இருப்பது மிக இன்றியமையாதது. ஒ. blood bank (மரு)

trigonometry - முக்கோணவியல்: முக்கோணங்கள், அவற்றின் பக்கங்கள் ஆகியவற்றிடையே உள்ள தொடர் புகளை ஆராயும் கணக்குத்துறை.

vitriol, blue - மயில்துத்தம்: செம்புச் சல்பேட் (வேதி)

vitriol, green - பசுந்துத்தம்: பெரஸ் சல்பேட் (வேதி)

vitriol, white - வெண்துத்தம்: துத்ததாகச் சல்பேட் (வேதி)

workaholic - வேலைக் களைப்பர்: மிகுவேலையால் களைப்புறுபவர். (தொ.நு)

workaholism - வேலைக் களைப்பு: மிகுவேலையினால் உண்டாகும் களைப்பு. இது ஒரு நிலைமையே, நோயன்று. (தொ.நு)