பக்கம்:அறிவியல் அகராதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bur

62

cad


burns - புண்கள்: தீ, வெப்பம், வேதிப் பொருள்கள் முதலியவற்றால் தோல் திசுக்கள் நைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால் ஒட்டுப் போட வேண்டும். வகைகள்: 1. செம்புண். 2. கொப்புளப் புண். 3. தோல் நீங்கு புண் 4. தீப்புண்: தசையும் எலும்பும் அழிதல். (உயி)

bus - 1. பேருந்து: பெரிய உந்து வண்டி. பயணிகள் செல்வது. 2. போக்குவாய்: மின்தடம். இதன் வழியே செய்திக்கூறுகள் இரண்டிற்கு மேற்பட்ட கருவியமைப்புகளுக்கிடையே செல்லும். கணிப்பொறி தொடர்பாகப் பயன்படுஞ் சொல். பா. data bus. (இய)

bush - துளையுள்ளி: ஒரு கருவியமைப்புப் பகுதியில் அழிவுத்தேய்வு ஏற்படும்போது தாங்கியாக அமைந்து உரிய புழக்கத்தைக் கொடுக்கக் கடைந்து போடப்படும் தாங்கி. (தொ.நு)

butterfly - வண்ணத்துப்பூச்சி: இறக்கைகளும் செதில்களும் உள்ள பூச்சி. இறக்கைகளாலும், செதில்களாலும் உடல் மூடப்பட்டிருப்பது. தொகுப்புணரிகள் இருப்பதால் அந்துப் பூச்சியிலிருந்து வேறுபடுவது. குழல்வாய் (புரோபோசிஸ்), தேன் பருகும் சிறப்புறுப்பு. (உயி)

butterfly valve - வட்டு வடிகத் திறப்பி: பெட்ரோல் எந்திரத்தின் கலவையாக்கியிலுள்ள திறப்பி. பெட்ரோல் ஆவி செல்வதைக் கட்டுப்படுத்துவது. (இய)

buttress root - வேற்றிடவேர்: சமச்சீர் இல்லாத தூண் வேர். எ-டு ஆலம் விழுது. (உயி)

butyl rubber - பூட்டைல் ரப்பர்: செயற்கை ரப்பர், டயர்கள், குழாய்கள் கொள்கலன் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி)

BVO, Brominated vegetable oil - பிவிஓ, புரோமின் கலந்த தாவர எண்ணெய்: மென்புற்று நோயை உண்டாக்குவது. (உயி)

bye-pass surgery - மாற்றுவழி அறுவை: புறவழி அறுவை. (மரு)


C

cable television - கம்பிவடத் தொலைக் காட்சி: கம்பிகள் வழியாகக் காண்போருக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குதல். இதில் முதன்மையாகப் பதிவு செய்த திரைப்படங்களே காட்டப்படுகின்றன. இது நல்ல வணிக முயற்சி. (இய)

cadmium - கேட்மியம்: Cd. இது வெண்ணிற உலோகம். அல்லணுக்களை உறிஞ்சுவது. அணு உலைகளில் கட்டுப்பாட்டுக் கோல்களாகப் பயன்படுவது. (வேதி)