பக்கம்:அறிவியல் அகராதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coe

90

col


போன்ற உடற்குழி இருப்பது தனிச்சிறப்பு. இதனாலேயே இதற்கு குழிக்குடலி என்று பெயர். உணர் விரலில் கொட்டும் அணுக்கள் உண்டு. விலங்குகள் வகைப்பாட்டில் உடற்குழி சிறப்பிடம் பெறுவது. ஆரச்சமச்சீர் உடையவை. (உயி)

coelom - உடற்குழி: மிக முன்னேறிய விலங்குகளின் இடைப்படையில் உண்டாகும் பாய்மம் நிரம்பிய குழி. மண்புழு, நத்தை, முட்தோலி, முதலியவற்றில் இது முதன்மையானது. (உயி)

cohesion - அணுப்பிணைவு: பருப்பொருள் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவரும் ஆற்றலே, அவற்றை ஒன்றாகப் பிணைக்கின்றன. இதற்கு அனுப்பிணைவு என்று பெயர். பாதரசம் கையில் ஒட்டாததற்கு இதுவே காரணம் ஆகும். (இய).

coinage metals - நாணய உலோகங்கள்: தனிமவரிசை அட்டவணையில் முதல் தொகுதியின் துணைத் தொகுதியைச் சார்ந்தவை செம்பு, வெள்ளி, பொன். (வேதி)

coitus - மெய்யுறுபுணர்ச்சி: பாலூட்டிகளுக்குரியது. (உயி)

coke - கல்கரி: நிலக்கரியை வெப்பப்படுத்திப் பெறலாம். இச்செயலில் அதிலிருந்து ஆவியாகக் கூடிய பொருள்கள் நீங்கும். ஊதுலையில் இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரிப்பதில் ஒடுக்கியாகப் பயன்படுதல். (வேதி)

cold blooded animals - மாறும் வெப்பநிலை விலங்குகள்: குளிர்க்குருதி விலங்குகள் உடலின் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறுவது. எ-டு. மீன்.

cold light - குளிர்ஒளி: ஒளிர் ஒளியில் அகச்சிவப்புக் கதிர்வீச்சு இல்லலாததால், வெப்ப விளைவு இராது. இந்நிலையே ஒளிர்ஒளி அல்லது தண்ணொளி. (உயி)

cold, common - பொது நீர்க்கொள்ளல்: காலநிலை வேறுபாட்டினாலும் நோய்த்தொற்றலினாலும் உண்டாவது, நோய்த்தொற்று நச்சியமாகும். அடைகாலம் மூன்று நாட்கள். தடுப்பாற்றல் ஒரு திங்கள் வரை இருக்கும். ஓய்வு தேவை. ஊட்ட உணவு உட்கொள்வது நல்லது. சல்பா மருந்துகளையும் உட்கொள்ளலாம். (உயி)

collagen - நார்ப்புரதம்: இணைப்புத் திசுவிலுள்ள நார் போன்ற புரதம். எலும்புப்பசையாக (ஜெலாட்டின்) மாறுவது. தோல், தசைநாண், எலும்பு முதலியவற்றிலுள்ள முதன்மையான புரதம். (உயி)

coleoptile - விதைக்குருத்துறை: புல் முளைக்கருவின் இளத்தண்டகத்தை மூடும் பாதுகாப்புறை. முதல் இலை வெளிப்பட்டதும் அது வெடிக்கும். (உயி)