பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Por

482

Pot


Porch : (க.க.) புகுமுக மண்டபம்: ஒரு கட்டிடத்தின் முகப்பில் தனிக் கூரையுடன் கூடிய மண்டபம்.

Porosity : கசிவுத் திறன் : உலோகம் அல்லது பிற பொருள்களின் வழியாக அழுத்தப்படும் போது காற்று, வாயு அல்லது திரவம் கசியும்படி செய்யும் திறன்.

Port : (தானி.) காற்றுப் புழை : எஞ்சினின் உள்ளெரி அறைக்குள் எரிபொருள் செல்வதை அனுமதிக்கக் கூடிய அல்லது வாயுக்கள் வெளியேற அனுமதிக்கக்கூடிய ஒரு வழிப்புழை.

Portal: (க.க.) நுழைவாயில்: அணி வாயிற்கதவம் அல்லது அணிகெழு வாயில், பொதுவாக பெரிய கட்டிடங்களில் உள்ளது.

Portico: (க.க.) மூடுமுன்றில்: தூண்கள் தாங்கும் கூரையுடைய இடம். பொதுவாக ஒரு கட்டிடத்தில் நுழைவாயிலிலுள்ள புதுமுக மண்டபம்.

Portiere: கதவத்திரை: கதவு நிலையில் பயன்படுத்தப்படும் ஒரு திரை.

Portland cement: (க.க.) சீமைக்காரை: சீமைச்சுண்ணாம்பு, களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் செயற்கைப் பசைமண்.

Positive: ஒளிப்பட நேர்படிவம்: ஒளிப்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படிவம். இது மறி நிலைப் படிவத்திற்கு எதிர் மாறானது.

Positive electricity: நேர்மின் ஆற்றல்: கண்ணாடியைப் பட்டுத்துணியால் தேய்ப்பதனால் ஏற்படும் மின் ஆற்றல்.

Positive plate: (மின்.) நேர்மின் தகடு: ஒரு சேமக்கலத்திலுள்ள தகடு. இது பொதுவாகப் பழுப்பு நிறத்தில் இருக்கும். மின் சுற்றுவழி முற்றுப் பெறும்போது இதிலிருந்து மின்விசை பாய்கிறது.

Positive pole:வடகாந்த முனை: காந்த வகையில் வடக்கு நோக்கிய முனை.

Positron: நேர் ஆக்கமின்மம்: மின்மங்களுக்கு ஆற்றலில் இணை யாகத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மீன் திரள்.

Potassium (வேதி.) பொட்டாசியம்: வெண்மையான மெழுகு போன்று வெண்மையான உலோகத் தனிமம். இது ஈரக்காற்றில் விரைவாக ஆக்சிஜ னுடன் இணைந்து ஆக்சைடாகக் கூடியது. இதன் உருகுநிலை 63.5°C. வீத எடைமானம் 0.8621. இதன் பலவகை உப்புகள் மிகுந்த பயனுடையவை

Potential:(மின்) மின்னழுத்த நிலை: மின்னுாட்டத்தின் அளவு அல்லது மின் அழுத்தத்தின் அளவு. வேண்டும்போது செயல் திறப்படுத்தப்படும் அடங்கிய மின்னாற்றல் வளம். இது ஒல்ட் என்னும் அவுகுகளில் அளவிடப் படுகிறது.