பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Pow

484

Pre


னிழையை அல்லது வெப்ப ஆற்றலை வழங்கும் ஒரு சாதனம்.

Power plant: (தானி.) விசை எந்திரம்: எரிபொருள், கரியச் சேர் மானச் செறிவு, எரியூட்டம் குளிர்விப்பு, மசகிடுதல் போன்றவற்றுக் கான அமைவுகள் அமைந்த எந்திரம்.

எந்திரவியலில் மின் விசையை உற்பத்தி செய்து, வழக்கீடு செய்வதற்கான கொதிகலன்கள், மின்னாக்கிகள் முதலியவை.

Power steering: தானி:(எந்.) விசை இயக்காழி: எஞ்சின் இயங் கும்போது சுதந்திரமாக இயக்குவதற்கு அனுமதிக்கும் இயக்காழி. இது இயக்காழி அலகுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னியக்கச் செறிவியின் மூலம் நீரியல் முறையில் இயக்கப்படுகிறது.

Power transfomer:(மின்.) விசைமின் மாற்றி: உயர்ந்த மின்னழுத் தத்தையும் குறைந்த மின்னோட்டத்தையும், உயர்ந்த மின்னோடத்துடனும், குறைந்த மின்னழுத்தத்துடனும் இணைப்பதற்கும், குறைந்த மின்னழுத்தத்தையும், உயர்ந்த மின்னோட்டத்தையும் உயர்ந்த மின்னழுத்தத்துடனும், குறைந்த மின்னோட்டத்துடனும் இணைப்பதற்கான ஒரு சாதனம். இவை பொதுவாக 60 சுழற்சி அலைவெண்ணுடன் பயன்படுத்தப்படுகிறது.

Power tube: விசைக் குழல்: ஒலி அலைவெண் மிகைப்பியில் கடை

சிக் கட்டத்தில் பயன்படுத்தப்படும் வெற்றிடக்குழல். ஒலி பெருக்கி இயக்கத்திற்கு இது பெரிய அளவிலான ஒலி அலைவெண் அளிக்கிறது.

Power unit: (மின்.) மின்விசை அலகு: மின் சுற்றுவழிகளில் மின் விசையின் அலகு வாட். இது வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஒர் அலகு செயற்படும் வீதம் ஆகும்.

Precipitate (குழை.) வீழ்படிவு: வேதியியல் மாற்றம் காரணமாக ஒரு கரைசலில் கரையாத வண்டலாகப் படியும் மண்டிப்படிவு.

Precision grinding: (எந்.) துல்லியச் சானை: எந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டளவு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடி எந்திரச் சாணை.

Precision lathe: (எந்.) துல்லியக்கடைசல் எந்திரம்: துல்லியமான கடைசல் வேலைப்பாடுகளைச் செய்வதற்கேற்ற் சிறிய மேசைக் கடைசல் எந்திரம்.

Prefabricated: (க.க.) முன்னிணைப்பு: கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைக்கு வேண்டிய பகுதிகளை அல்லது உறுப்புகளை தனித்தனியாக வேறிடங்களில் முழுமையாக உருவாக்கி, பயன்படுத்த வேண்டிய இடத்திற்குக் கொண்டுவந்து இறுதியாக ஒருங்கிணைத்து அமைத்தல்.